ஆயுள் பலம் தரும் முருங்கை

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை: moringa soup murungai keerai adai

முருங்கைக்கீரை (இளம் காம்புடன்) – 2 கப்,
பூண்டு- 5 பல்,
சின்ன வெங்காயம் – 6,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம்- அரை டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கேற்ப.

செய்முறை :

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.

moringa soup murungai keerai adai

பாசிப்பருப்பு – முருங்கைக்கீரை அடை

தேவையானவை:

பாசிப்பருப்பு – 2 கப்,
இஞ்சி – 1 துண்டு,
சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கிய),
முருங்கைக்கீரை – 1 கப்
பச்சை மிளகாய் – 3
கடூகு – சிறிது
சீரகம் – சிறிது
கடலைப்பருப்பு – சிறிது ,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை :

பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.

முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது.

You may also like...