வெஜ் மசாலா கஞ்சி
இந்த சமையல் பதிவில் வாயிலாக “அனிதா பார்வதி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – vegetable kanji recipe tamil
தேவையானவை
1). அரிசி ஒரு கப்
2). சிறுபருப்பு – ரெண்டு ஸ்பூன்
3). பட்டை – 1 துண்டு
4). வெந்தயம் கால் ஸ்பூன்
5). நெய் அரை ஸ்பூன்
6). பால் ஒரு தம்ளர்
7). சீனி 3-5 ஸ்பூன் (தேவைக்கேற்ப)
8)மிளகு – 1/4 ஸ்பூன்
நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டியது
சின்ன சைஸ் பெல்லாரி – 1
தக்காளி – 1
கேரட் – 1
பீன்ஸ் – 3
உருளைக்கிழங்கு – 1
பூண்டு 3 – 4
இஞ்சி (இஞ்சி பூண்டு இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்)
கொத்தமல்லி
கறிவேப்பிலை
தேவையான பொடிகள்
மஞ்சள் பொடி
மிளகாய் வற்றல் பொடி
பிரியாணி பொடிசீரகத்தூள்
தனியாத்தூள் – தலா கால் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப (உப்பு குறைத்து போட்டுக்கொள்ளவும்)
செய்முறை
குக்கரில் அரை ஸ்பூன் நெய் விட்டு பட்டை மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும் ஓரளவு நன்றாக வதங்கிய பின் பொடிகள் அனைத்தையும் போடவும் (விருப்பப்படுபவர்கள் வேர்க்கடலை அல்லது முந்திரிபருப்பு சேர்த்துக் கொள்ளலாம்)பின் உப்பு , அரிசி மற்றும் சிறு பருப்பை (அரிசி, சிறு பருப்பை லேசாக கழுவிக் கொள்ளவும் ) சேர்த்து வழக்கமாக வைக்கும் தண்ணீரை விட அரை கப் அதிகமாக ஊற்றி குழைய வேகவிடவும். ஆறியவுடன் லேசாக குழைத்துக்கொண்டு அத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.சர்க்கரை நோயாளிகள் பால் சேர்க்காமல் உப்பு கொஞ்சம் கூட போட்டு அப்படியே சாப்பிடலாம் – vegetable kanji recipe tamil.
எளிதில் செரிக்கக் கூடிய, எல்லோருக்கும் ஏற்ற உணவு.எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம்.எல்லாப் பொருட்களும் சேருவதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்துள்ள ஒரு கஞ்சி..சுவையும் அனைவரும் விரும்பும் வண்ணம் உள்ளது இந்தக் கஞ்சியின் தனி சிறப்பு.
– சி.அனிதா பார்வதி, பெங்களூரு
இந்த காலகட்டத்திற்கேற்ற கஞ்சி… அருமை..வாழ்த்துகள்
மசாலா கஞ்சி நன்றாக பசி தாங்கும் மிகவும் சத்தானது.
செய்ய எளிதாக இருந்தது. அருமை. பாராட்டுக்கள்
சத்தான கஞ்சி. செய்து பார்க்கிறேன்
குழந்தைகள் கண்டிப்பாக விரும்பிவார்கள்..சத்துள்ள உணவு..புதுவரவிற்கு வாழ்த்துகள்
அருமையான, பயனுள்ள பதிவு.