உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் உங்கள் பாதத்தில்

வைட்டமின் குறைபாடுகள் முதல் தைராய்டு பிரச்சனைகள் வரை, உங்கள் பாதங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை புட்டு புட்டு வைக்கும். நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவில் பல உடல்நல விஷயங்கள் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் பாதங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும்.
அப்படிப்பட்ட பாதங்களை எளிமையாக பராமரிக்க; The healthy based on your feet

healthy based feet

*கால்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்தி பின் பாதத்தில் இருக்கும் சுரசுரப்பினை ப்யூமிக் கல் கொண்டு மென்மையாய் தேயுங்கள். வாரமொருமுறை இவ்வாறு செய்யுங்கள்.

* கால்களுக்கு மாஸ்ட்சரைஸர் அவசியம். இரவில் படுக்குமுன் தினமும் இவ்வாறு செய்யுங்கள்.

* சேற்றுப்புண் பெண்களிடையே சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. இதற்கான நல்ல மருந்துகள் கடைகளில் எளிதில் கிடைக்கின்றன.

* பாதம் வறண்டு இருந்தால் அதற்கான சிறப்பு லோஷன்களை பயன்படுத்துங்கள்.

* அதிக நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தால் அதற்கான ‘இன்சோல்’ எனப்படும் ஷீவின் உள்உறையை பயன்படுத்துவது நல்லது.

* நகங்களில் அழுக்கு சேராமல் முறையாய் வெட்டி விடுங்கள்.

* நகங்களுக்கும் கிளசரின், ஈ ஆயில் போன்றவற்றினை பயன்படுத்தலாம்.

* தினமும் பாதங்களை செக் செய்யுங்கள்.

* தினமும் பாதங்களை நன்கு கழுவுங்கள்.

* பாதத்தினை மென்மையாக வைத்திருங்கள்.

* கால் ஆணி, தடிப்பு இவற்றினை உடனடியாக கவனியுங்கள்.

* நகங்களை நன்கு வெட்டி விடுங்கள்.

* அதிக உஷ்ணம், அதிக குளிர் பாதத்திற்கு கூடாது.

* கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

The healthy based on your feet

You may also like...