அகத்தின் அழகை வெளிபடுத்தும் முகத்திற்கு

அகத்தின் அழகு முகத்தில் என்று சொல்லுவார்கள் அப்படி பட்ட முகத்தை பராமரிக்க சில குறிப்புகள்… Face wash tips

• எப்போதுமே சருமத்திற்கு ஏற்றவாறான ஃபேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்தது.

face wash tips

• முகத்தைக் கழுவும் போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியுடனோ இருக்கும் நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே மிதமான நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தியே முகத்தைக் கழுவ வேண்டும்.

• குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

• முகத்தில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. மேலும் கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

• மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிலர் கிளின்சர், டோனர், மாய்ஸ்சுரைசர் போன்ற செயல்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த செயல்கள் அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம்.

• தயிர் அல்லது பால் சிலருக்கு கெமிக்கல் பொருட்கள் பிடிக்காது. அத்தகையவர்கள் தயிர் அல்லது பால் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். அதற்கு தயிர் அல்லது பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த செயலுக்கு பின் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சோப்பு தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்.

Face wash tips

You may also like...

1 Response

  1. That article was amazing, I am very much impressed with your thoughts. I got the best information from this site of the blog, It’s very useful to all and us. Thanks for sharing this post.