என் மின்மினி (கதை பாகம் – 35)

சென்ற வாரம் திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35.

en minmini kathai paagam serial

சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன சொல்றேனு டெஸ்ட் பண்ணி பாத்தே.சரி இப்போ எங்க போறோம் ஏஞ்சலின்…
ம்ம் என் வீட்டுக்கு தான்.வேற டிரஸ் மட்டும் மாத்திட்டு உன்ன கொண்டு உன் ஹாஸ்டல்லில் ட்ராப் பண்றே என்றான் பிரஜின்… ஐய்யோ நான் வரல.என்ன கொண்டு விட்டுட்டு அப்புறம் நீ உன் வீட்டுக்கு போயே ப்ளீஸ் என்றாள் ஏஞ்சலின்…

அப்போ என் கூட என் வீட்டுக்கு வர இஷ்டம் இல்ல அப்படித்தானே.சரி ஓகே வராதே.ஆனால் ஒரு கண்டிஷன். நீஇப்போவே இறங்கி பஸ்ல ஹாஸ்டல் போகனும் என்று லேசான கோபத்துடன் பிரஜின் சொல்லவும் மழை மீண்டும் லேசான தூறலை ஆரம்பித்தது.

ஹே அப்படியெல்லா இல்ல.மழை வேற வருது அத பாக்குறே.சரி நான் வருகிறேன்.ஆனா ரொம்ப நேரம் இருக்க மாட்டே என்றாள் ஏஞ்சலின்…

ஓகோ சரி சரி என்று சிரித்தபடி வண்டியின் வேகத்தை கூட்டினான் பிரஜின்…
வண்டி பிரஜின் வீட்டு வாசலில் வந்து நின்றது.இதுதான் என்னோட குட்டி வீடு.கொஞ்ச அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வசதியெல்லா குறைவாதான் இருக்கும் என்று சிரித்தான் பிரஜின்…

ச்சே ச்சே என்ன இப்படி சொல்றே.எனக்கு உன் வசதியை விட உன்னோட உணர்வுகளும் அன்பும் தான் முக்கியம் என்று வீட்டுக்குள் போக துடித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-35.

– அ.மு.பெருமாள்

பாகம் 36-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. surendran sambandam says:

    கதை விறுவிறுப்பாக போகிறது

  2. Kavi devika says:

    சுவாரஸ்யம்…. மிக அருமை

  3. R. Brinda says:

    கதை நன்றாக, சீரியல் போலச் சென்று கொண்டு இருக்கிறது.