சட்டைமுனி சித்தர்

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார் – sattaimuni siddhar

sattaimuni siddhar

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.

எட்டு வகையான யோகாங்கம்

இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் – நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் – பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவை சீா்படுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் – புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை – தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் – தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி – சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.

அபூர்வ சக்தி

சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார். போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர் – sattaimuni siddhar.

சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இயற்றிய நூல்கள்

 • சட்டைமுனி நிகண்டு – 1200
 • சட்டைமுனி வாதகாவியம் – 1000
 • சட்டைமுனி சரக்குவைப்பு – 500
 • சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500
 • சட்டைமுனி வாகடம் – 200
 • சட்டைமுனி கற்பம் – 100
 • சட்டைமுனி உண்மை விளக்கம் – 51
 • சட்டைமுனி தீட்சை – 200
 • சட்டைமுனி ஞானம் – 200
 • சட்டைமுனி பின் ஞானம் – 200*சட்டைமுனி சடாட்சர கோவை – 108
 • சட்டைமுனி நிகண்டு சூத்திரம் – 51
 • சட்டைமுனி தண்டகம் – 81
 • சட்டைமுனி மேற்படி சூத்திரம் – 52
 • சட்டைமுனி குரு சூத்திரம் – 25
 • சட்டைமுனி ஞான விளக்கம் – 51

திருவரங்கத்தில் சமாதியடைந்தார்

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.

அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி.

சட்டைமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவரங்கத்தில் சமாதியடைந்தார். சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது – sattaimuni siddhar.

You may also like...

2 Responses

 1. R. Brinda says:

  சட்டைமுனி நாதரைப் பற்றிய தகவல்களை விளக்கமாகத் தந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

 2. surendran sambandam says:

  புதிய தகவலுக்கு நன்றி