சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar

suntharanaar siddar

சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

கிஷ்கிந்தை நகரில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் எழுதிய குறிப்பு உரைக்கிறது. இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனி சித்தரால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

சுந்தரானந்தர் மதுரை நகர் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென தோற்றத்தை மறைத்துக்கொண்டும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க இவரை அரண்மனைக்கு அழைத்துவர சொன்ன மன்னனை சுந்தரானந்தர் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார் – suntharanaar siddar.

சித்தரைப் பார்க்க வந்த அரசர், ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உன்னச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்ததும் உருமாறி யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டு சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.

இவர் இயற்றிய நூல்கள்

சோதிட காவியம்
வைத்தியத் திரட்டு
தண்டகம்
முப்பு
சிவயோக ஞானம்
அதிசய காராணம்
பூசா விதி
தீட்சா விதி
சுத்த ஞானம்
கேசரி
வாக்கிய சூத்திரம்
காவியம்
விச நிவாரணி

இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

You may also like...

2 Responses

  1. surendran sambandam says:

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  2. N.sana says:

    சுந்தரானந்தர் சித்தர் காலத்தில் நான் வாழவில்லையே என தோன்றுகிறது…அவரின் மகிமையை அறிய செய்ததுக்கு நன்றி…🤝