கவிதை தொகுப்பு – 37

நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன், கவி தேவிகா, ப்ரியா பிரபு மற்றும் நவீன் ஆகியோரின் கவிதைகளை வாசிக்கலாம் – puthu kavithai thoguppu.

pirivu kavithai

காதல் பரிசு

உன் வரவுக்காக
இருபது வருடம்
தவம் இருந்தேன்.
நீ கடக்கும்
ஒரு நொடிக்காக
வாயிற் கதவோரம்
வாடி வதங்கினேன்.
உன் முகஅழகு
காணவே நான்
ஆயிரம் முறை
நாணிச் சிவந்தேன்.
அன்பை மட்டுமே
அள்ளி கொடுத்த
எனக்கு நீ தந்த
பரிசோ……..
காதல் வலி…..
கண்ணீர்த் துளி……..

– கவி தேவிகா, தென்காசி


எண்ணங்களின் வண்ணங்களாய்

ஒவ்வொரு முறையும்
விலக நினைக்கையில்
இன்னும் இன்னுமாய்
எனை இறுகப்பிடிக்கிறது
உன் நினைவுகள்..
எந்த புள்ளியில் இணைந்து
எவ்விதம் வந்தாயோ..
என் கோலமதில்
வண்ணமாய் நீயே
நிறைந்திருக்கிறாய்..
வண்ணம் களையவும்
விழைகிறேன்..
ஆனால்
அழிவது கோலமும்தான்..
அழிக்கவும் இயலாமல்
மறைக்கவும் முடியாமல்
என்னுள் பதிந்த
ரேகையாய்.. நீ – puthu kavithai thoguppu

– ப்ரியா பிரபு, நெல்லை


தனிமை

யாரும் கேட்பாரற்ற
தனிமை மிக கொடியது தான்
ஆனால் அந்த தனிமையை கூட
உன்னால் நேசிக்கிறேன்
அப்போது தானே
உன் நினைவுகளில்
நான் மூழ்கி போக முடியும்

– நவீன் ஈரோடு


முதியோன் என எண்ணாதே

அவரது வயதோ எழுபத்தி எட்டாம் அவர் வாழ்வில்
அடைந்த துன்பத்திற்கோ அளவேயில்லை எனலாம்

மனைவியை மகளையுமே சாலை விபத்தில் ஒன்றில்
பண்டிகைநாளில் பலி கொடுத்ததோடு மூத்த
மகன் மூளைப்புற்றுநோய் இரண்டாம் மகனோ சீர்
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையென்றாகி இறந்தது
இன்னொரு உண்மை
அவருக்குமே முகசதை வாத நோய் உண்டாம் உணருவீர்

என்றாலும் தான் உட்சபட்ச குறிக்கோள் நிர்ணயித்து மூன்று முறை முயற்சித்த
பின் வெற்றி பெற்றதுவே இன்றைய வரலாறாகும்
அது இடையில் கிடைத்த நற்பேறால் அல்ல கடின உழைப்பும் திட்டமிடலும்
அடிப்படை காரணமாகும்

அகவை ஐம்பதுகடந்தோர் மட்டுமின்றி இக்காலத்து
இளைஞர்கள் உணருதலே அவசியமென உரைப்பேன் அவர் வாழ்வு சரிதையதை

அமெரிக்க குடியரசு உயர்
பதவியதனை இப்போது அலங்கரிக்கும் பெருமை
மிகு ஜோ பைடன் புகழ்
பாட எழுந்ததல்ல இது

முயற்சிக்க முன்னேற நம்
அகவை ஒரு பொருட்டல்ல என்பதை உணரவேயாம்

– மா கோமகன்


vetridam kavithai thoguppu

வெற்றிடம்

வெற்று நாற்காலியை
உற்றுப் பார்க்கிறேன்

உற்ற துணையின்றி
வெறுத்துப் போகிறேன்

நேற்றுவரை நீயமர்ந்த என் இதயச் சிம்மாசனம்

சிதைந்து கிடப்பதைக்
கண்டு சிரமப் படுகிறேன்

சித்ரவதையால்
கண்ணீர்விடுகிறேன்

உறக்கமிழக்கிறேன் உன்
உருவமில்லா நாற்காலி கண்டு

நான் துன்பப் படுகிறேன்
துயரப் படுகிறேன்

அனாதையான ஓர் உணர்வு
அரித்துச் செல்கிறது

அதில் கண்ணீரோடு நானும் அடித்துச் செல்லப்படுகிறேன்

கத்தினாலும் கதறினாலும் கண்ணீர்துடைத்திட ஆளின்றி

உயிர் போகும் வலியில் நான் உளன்று போகிறேன்

மாலைப் பொழுதிற்குள் மரித்துவிட மனம் லயிக்கிறது

என்னிடம் அமர்ந்திருந்த
என் எட்டாம் அதிசயம்

எங்கு சென்றதென
உயிர் அலை மோத அழுது
நான் தேடுகிறேன்

– சிங்க தமிழன்


You may also like...

7 Responses

 1. surendran sambandam says:

  அனைத்து கவிதைகளும் மிக அற்புதம்

 2. Alagammai says:

  அனைத்து கவிதை யும் அருமை

 3. Alagammai says:

  அனைத்துm அருமை

 4. K.Aruna says:

  Arumaiyana kavithaigal

 5. SIVARAMAKRISHNAN says:

  கவிதைகள் அனைத்தும்…முத்துகள்.. வாழ்த்துகள்..

 6. Parvathy says:

  எல்லா கவிதைகளையும் மிகவும் அருமையn க இருந்தது

 7. தி.வள்ளி says:

  கவிதை தொகுப்பு மிகவும் அருமை. அனைத்து கவிதைகளும் தனித்துவம் பெற்று அருமையான வரிகளால் அமைந்திருந்தது .வாழ்த்துக்கள் கவிகளுக்கு