வலையோடை பதிவு 2

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 2

valaiyodai part 1

எதிரியுடன் போட்டியிட நல்ல புத்தியும் துரோகியை எதிர்கொள்ள நல்ல யுக்தியும் இருந்தால் அனைத்து துன்பங்களையும் எதிர்கொள்ளலாம் துணிவோடு..
@NALLANANBAN


“ஆவதும் “
நம் ஆசையாலே…
“அழிவதும் “
நம் பேராசையாலே…
@Thiyagu_Twits


நம்மிடம் எதையும் மறைக்க மாட்டர்கள் என்று கண்மூடித்தனமாக
நாம் நம்பிக்கை வைத்திருப்பவர் தான் நம்மை
முதலில் ஏமாற்றுவார்…
@inshira


உலகில் அதிர்ஷ்டசாலிகள்..
பசியோடு உணவும் இருப்பவன்.
படுக்கையோடு உறக்கம் பெற்றவன்.
செல்வத்தோடு நேர்மையும் உள்ளவன்… !
@junaidaainsha


காகித பூக்களில் வண்டுகள்
மொய்ப்பதில்லை……!!
காசில்லாதவனை உறவுகள் மதிப்பதில்லை….!!
@Anar197


தாய் தந்தையை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள் அவர்கள் அழுவதில்லை உடைந்து போவார்கள்.
@Dharshan47001815


முன்மாதிரிகளை போல வாழ பல மாதிரிகள் உண்டு உன் மாதிரியாக வாழ நீ மட்டும் தான் உன் இப்பிறப்புக்கு… – valaiyodai part 2
@Mindvoice…


ஒருசிலர் கிட்ட பேசுறது நம்மின் நிம்மதிக்காக,
ஒரு சிலர் கிட்ட பேசாம இருக்கிறதும் நம்மின் நிம்மதிக்காக தான்!!
@Kozhiyar


துன்பம் அதிகமாகும் வேளையில் துணிச்சலும் அதிகமாக வேண்டும்…
@Sabarish_twittz


தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை… சுகர் இல்லாத காஃபி மாதிரி தான்… என்னதான் வாசமா இருந்தாலும் சுவைக்காது …
@mazhaimugil


தோல்விக்கு கவனக் குறைபாடும், வெற்றிக்கு முழு ஈடுபாடும் அடித்தளமாக அமைகிறது.
@weknowth827


பதிவுகள் இடம்பெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

You may also like...

4 Responses

 1. NithyaLakshmi says:

  Really Super

 2. N.கோமதி says:

  நிறைவான வாழ்க்கைக்கு வழி சொல்லுகின்றன.கடைபிடித்தால் களிப்பு நிச்சயம்.

 3. N.sana says:

  Ellam super

 4. தி.வள்ளி says:

  சிறிய சிந்தனை துளிகள் அருமை…புதிய முயற்சி சுவாரசியம் …