வார ராசிபலன் மார்கழி 26 – தை 03

மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-10 to jan-16.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் குழப்பம் நிலவும், வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரம் சுமாராகவே இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாதையை வகுப்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது. 
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், வாரத்தின் பின் பாதி குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது, சகோதர வழியில் ஆதரவு பெருகும், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து போகவும். தாயின் உடல்நலம் சற்று பாதிப்படையும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் மோசமான சூழ்நிலையை சந்திப்பார்கள்.  விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். 
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். வீட்டில் பெண் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் நல்ல செல்வாக்கை அடைவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் உருவாகும். கலைஞர்கள் சக ஊழியர் மத்தியில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகளாக சிறப்பாக திகழ்வார்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. உடல்நலனில் சற்று கவனம் தேவை. சகோதர சகோதரிகள் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நல்ல உயர்வை  அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறையும். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தியடையும். 
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் தீராத பாதிப்பு அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.  கீரை வகைகள் மூலம் விவசாயிகள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். 
பரிகாரம்: வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறு குழப்பங்கள்  நிலாவும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்,  சகோதரிகள் போக்கு சங்கடங்களை உருவாக்கலாம். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் உற்சாகமாக தென்படுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தினத்தில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியமாக காணப்படும். சிறு பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள்  சிறப்படைவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நன்மை பயக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பம் குழப்பத்தில் இருக்கும், பணவரவு சீராக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது. கலைஞர்கள்  தோல்வி அடைவார்கள். மாணவர்கள் நல்ல உச்சம் பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராகவே காணப்படும். உறவினர் வருகை   நன்மை பயக்காது. குடும்ப ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணியாளர்களுக்கு ஏதாவது வகையில் வரவு இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கலைஞர்கள் வருமானம் உயரும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் இரட்டிப்பு வருவாய் பெறலாம்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். சுற்றுவட்டத்தில் போட்டி மனப்பான்மை இருக்காது. பணியாளர்கள் நல்லோர் ஆசி பெறுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை பெறுவார்கள். விவசாயத்தில் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும் – rasi-palangal jan-10 to jan-16.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. surendran sambandam says:

    ராசி பலன்கள் கூறியபடியே நடக்கின்றது நன்றி

  2. N. Shanmugapriya says:

    தனுசு என்னுடைய ராசி. பலன் நன்றாக தான் இருக்கிறது. பார்ப்போம்…