மார்கழி மாத இதழ்

ஆன்மீக குறிப்புகள், மார்கழி கோல போட்டி 2021, பரிசுப்போட்டி 2020 (இரண்டாம் கட்ட) முடிவுகள், பாட்டி வைத்தியம், குளியல் சூத்திரங்கள், இரட்டை சொற்களுக்கான விளக்கம் போன்ற பல பயனுள்ள தகவல்கள் – margazhi matha ithal

margazhi matha ithal

மார்கழி கோலப்போட்டி 2021

தை 15 ஆம் தேதிவரை பகிரப்படும் கோலம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும், மேலும் மார்கழி மாதம் வெளியிடப்படும் பதிவுகளுக்கு (comments) பின்னூட்டம் பதிவு செய்ய வேண்டும்.
தாங்கள் பதிவிடும் பின்னூட்டத்திற்கு கொடுக்கப்படும் சிறப்பு புள்ளிகளை பொருத்து போட்டி முடிவுகள் முடிவு செய்யப்படும்.


பரிசுப்போட்டி 2020 (இரண்டாம் கட்ட) முடிவுகள்

பரிசுப்போட்டி 2020 இன் இரண்டாம் கட்ட பரிசுகளாக புத்தகங்கள்
ராஜகுமாரி அவர்களுக்கும்
பகவதி நாச்சியார் அவர்களுக்கும்

அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதிக்கட்ட முடிவுகள் பொங்கல் அன்று வெளியிடப்படும். கலந்துகொள்ள நாள்தோறும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பின்னூட்டம் பதிவிட்டால் போதுமானது.. (Post a Comment for daily posts)


மார்கழி மாத சிறப்பு

பள்ளி நாட்களில் மார்கழி பிறந்தாலே அதிகாலையில் வாசலில் பெரிய கோலமிட்டு , செம்மண் பட்டையடித்து பசுஞ்சாணத்தில் பூசணிப் பூ செருகி வைப்பது பிரசித்தம். அதற்கு பாட்டி கூறிய விளக்கம் ,கோலத்தின் வெள்ளை நிறம் பிரம்மாவையும் ,சாணத்தின் பசுமை நிறம் விஷ்ணுவையும் , செம்மண் நிறம் சிவனையும் குறிக்கும். பூசணியின் மஞ்சள்நிறமான மங்கல சின்னத்துடன், மகா லட்சுமியை வரவேற்கவே கோலம் இடுகிறோம்.

– என். கோமதி, நெல்லை


பாட்டி வைத்தியத்தில் உடல் எடை குறைய

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, உடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் நீக்கும். கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும். பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும். எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சேர்க்க வேண்டியவை : தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர். தவிர்க்க வேண்டியவை:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.


குளியல் சூத்திரங்கள்

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு அறிவியல் சார்ந்த உண்மையை உள்ளடகியே வைத்துள்ளார்கள். ஆனால் நாம் தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம். அவசர யுகமாகி போன இன்றைய சூழ்நிலையில் அழுக்கு போக குளிக்கிறோம் என்ற பெயரில் தேய் தேய் என்று தேய்க்கிறோம் இல்லை காக்கா குளியல் போடுறோம். ஒரு சில வேலைகளை எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறோம்.குளியல் என்பது என்னவென்றால் நம் உடலை குளிர்வித்தல் ஆகும் – margazhi matha ithal.

மனிதர்களுக்கு நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா? உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.இது எதற்கு என்றால் உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. அடடா என்கிறீர்களா !!

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஷவர் முக்கிய இடம் பெரும் நம் முன்னோர்கள் சொன்னதுக்கு அப்படியே எதிராக தான் நாம் செய்கிறோம் இதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

சூரிய உதயத்திற்கு முன் பச்சை தண்ணீரில் குளிப்பது மிகுந்த நன்மையை தரும் அதோடு சேர்த்த சூரியநமஸ்காரம் அபரிமிதமான பலன்களை கொடுக்கும்.


இரட்டை சொற்களுக்கான விளக்கம்

குண்டக்க மண்டக்க :
குண்டக்க : இடுப்புப்பகுதி,
மண்டக்க : தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்…

அந்தி, சந்தி:
அந்தி :
மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..
சந்தி :
இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..

அக்குவேர்,ஆணிவேர்:
அக்குவேர் :
செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்..
ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்… – margazhi matha ithal

அரை குறை:
அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது…

அக்கம், பக்கம்:
அக்கம் : தன் வீடும், தான் இருக்கும் இடமும்…
பக்கம் : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்…

கார சாரம் :
காரம் : உறைப்பு சுவையுள்ளது…
சாரம் : காரம் சார்ந்த சுவையுள்ளது…

இசகு பிசகு:
இசகு : தம் இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்…
பிசகு : தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்…

இடக்கு முடக்கு:
இடக்கு : கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்…
முடக்கு : கடுமையாக எதிர்த்து தடுத்துப் பேசுதல்…

ஆட்டம் பாட்டம் :
ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது…
பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது…

அலுப்பு சலிப்பு :
அலுப்பு : உடலில் உண்டாகும் வலி…
சலிப்பு : உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..

தோட்டம் துரவு ,
தோப்பு துரவு,
தோட்டம் : செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்…
தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்…
துரவு : கிணறு…

காடு கரை :
காடு : மேட்டு நிலம் (முல்லை)…
கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)…

காவும் கழனியும்:
கா : சோலை…
கழனி : வயல்.(மருதம் )…
நத்தம் புறம்போக்கு :
நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை…
புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்…

பழக்கம் வழக்கம் :
பழக்கம் : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது…
வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..

சத்திரம் சாவடி :
சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )…
சாவடி : இலவசமாக தங்கும் இடம்…

நொண்டி நொடம் :
நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்….
நொடம் : கை, கால் செயல் சுற்று இருப்பவர்.

பற்று பாசம் :
பற்று :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்…
பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது.

ஏட்டிக்குப் போட்டி :
ஏட்டி : விரும்பும் பொருள் அல்லது செய்வது..( ஏடம் : விருப்பம்)
போட்டி : விரும்பும் பொருள்செயலுக்கு எதிராக வருவது தான்…

கிண்டலும் கேலியும்:
கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது….
கேலி : எள்ளி நகைப்பது,..

ஒட்டு உறவு :
ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
உறவு : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்…

பட்டி தொட்டி :
பட்டி : கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)…
தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்…

கடை கண்ணி :
கடை : தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடைவீதிகள்…

பேரும் புகழம் :
பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை..
புகழ் : வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.

நேரம் காலம்:
நேரம் : செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கெள்வது (Time,..
காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..

பழி பாவம் :.
பழி : நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச்சொல்…
பாவம் , : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி…

கூச்சல் குழப்பம்:
கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்.(கூ-கூவுதல்)
குழப்பம் : துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்…

நகை நட்டு :
நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒடஒட்டியானமந
நட்டு : சிறிய அணிகலன்கள்..

பிள்ளை குட்டி:
பிள்ளை : பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்…
குட்டி : பெண் குழந்தையை குறிக்கும்…

பங்கு பாகம்:
பங்கு : கையிருப்பு.பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)…
பாகம் : வீடு, நிலம்.அசையா சொத்து…

வாட்டம் சாட்டம் :
வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்…
சாட்டம் : வளமுள்ள கனம்தோற்றப் பொலிவு…

காய் கறி :
காய் : காய்களின் வகைகள்…
கறி : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்…

ஈவு இரக்கம் :
ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்…
இரக்கம் : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்…

பொய் புரட்டு:
பொய் : உண்மையில்லாததைக் கூறுவது…
புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மையென கூறி நடிப்பது…

சூடு சொரனை :
சூடு : ஒருவர் தகாத செயல், சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு… – margazhi matha ithal
சொரணை : நமக்கு ஏற்படும் மான உணர்வு,,,

You may also like...

5 Responses

 1. உஷாமுத்துராமன் says:

  மார்கழி சிறப்பிதழ் படித்து மார்கழி பனியில் நனைந்த பிரிப்பு உண்டானது. ஆரம்பமே அசத்தல்

 2. surendran sambandam says:

  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அனைத்து தகவல்களும் நன்றி

 3. தி.வள்ளி says:

  மார்கழி இதழ் குளுமை .சகோதரி கோமதி அவர்களின் மார்கழி மாத மகிமை சிறப்பு ..பாட்டி வைத்தியம் அருமை…இரட்டைச் சொற்கள் பலவற்றின் பொருள் அறியாதது ..குளியல் சூத்திரமும் புதிய தகவலே…மொத்தத்தில் பல்சுவை விருந்து

 4. Kavi devika says:

  அருமையான பதிவுகள்.. கோல போட்டியுடன் களைகட்டட்டும் மார்கழி… வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்

 5. Kasthuri says:

  Super.. all useful information.. thanks neerodai