ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam.

jayakanthan kavithaigal puthaga vimarsanam

முன்னுரை

எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்.

பொதுச்சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், மூடப்பழக்கங்களை சாடுதல், கேள்விகள் என கவிதைகளை ஞானம வரிகளாய் நமக்கு இந்த தொகுப்பில் தந்துள்ளார் ஜெயகாந்தன் அவர்கள்…

இத்தொகுப்பு முழுவதும் கவிதைகளும் படமும் நிரம்பி நம் மனதில் நிரம்புகிறது.

“கடலை உருண்டை செய்து
கையிலதை அடக்கிடலாம்
உடலில் உயிர் நிறுத்த
ஒரு வழியும் காணவில்லை!

வானை அளந்தறியும்
வரலாறு எழுதுகின்றோம்
ஊனில் உயிர் எழுத
ஒரு வழியும் தெரியவில்லை”

என்றபடி யதார்த்தம் பேசுகிறார்.

“எதிர் வீட்டு ஜன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம்
எவ்வாறு வருகின்றதோ
புதிரான உலகில்
புதிராக வந்தேன்.. இதில்
புரிகின்ற செய்தி எதுவோ”

என்ற வரிகளால் நம்மை யோசிக்க வைக்கிறார் ஜெயகாந்தன் அவர்கள்.

“ஒரு சிரிப்பு சிரித்தார்- என்
உள்ளம் பறி கொண்டார்
ஒரு சிரிப்பு நான் சிரித்தேன்
ஊர் சிரித்துப் போச்சே”

ஆண் சிரிப்பிற்கும் பெண் சிரிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை அழகான கவிதை மூலம் எளிமையாய் சொல்லி உள்ளார்.

“எல்லோரும் வாருங்கள்
எழுந்து நடக்கலாம்
இத்தனை நாள் நடந்ததெல்லாம்
என்னவென்று பார்க்கலாம்”

என்றபடி நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

“கைகேயி கெட்டவள் அல்லள்
கூனி கூட கெட்டவள் அல்லள்…
காடு வரை போனவரை
பாதிவழி போய் மறித்துப்
பாதிகையைப் பறித்து வந்தான்
பரதனை பாவி”

என்றபடி பாடம் புகட்டுகிறார்.

“எறும்பைக் கொல்லுவதும்
பெரும்பாவம் என்று இருந்தேன்
என்னை வந்து கொல்லுவது இறைவனுக்கு சம்மதமோ”

என்று கேள்வி கேட்கிறார்.

“எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாளெல்லாம் திருநாள்
மரணம் எனக்கு கரிநாள்”

என்று தன்னை உணர்ந்த படி முற்போக்கு பேசுகிறார்.

“ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது..
இடமா வலமா
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது!

இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?”

என்றபடி வாழ்வியல் உண்மையை
போகிற போக்கில் மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

“கேளாதார் முன் ஞானம் மொழிந்து
கீழ்மகன் ஆவேனோ?
மூளாத கோபம் மூண்டெனை எரிக்க மூடனாய் சாவேனோ”

என்று சொல்லி பல கவிதைகளில் ஞானம் உரைக்கிறார்.

“அடிபடலாகாதா என்று நான் ஆசைப்படுகிறேன்…
அடிப்பாய் அடித்தபின் அணைப்பாய் எனுமொரு ஆசையினால்”

என்று காதலில் உருகி வழிகிறார்.

இனிக்க இனிக்க

“அன்பு சிவம் என்றால்
அன்பினால் பெற்ற இன்பம்
சிவம் ஆவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம்
சிற்றின்பம் சிறிய சிவம்”

என்றபடி சொல்லி மகிழ்கிறார்.

ஆழமான சிந்தனைகளை அற்புதமான சொல்லெடுத்து எளிமையாய் எல்லோரும் படிக்கும் வண்ணம் இன்வரிகளால் இனிக்க இனிக்க கவிதைகளைத் தந்துள்ளார் ஜெயகாந்தன் – jayakanthan kavithaigal puthaga vimarsanam.

புரட்சி முக்கிய எழுத்துக்களால் சிறுகதை உலகில் தனக்கென தனிஇடம் கொண்ட ஜெயகாந்தன் அவர்களை ஒரு கவிஞனாய் இந்த புத்தகத்தின் மூலம் நான் கண்டு விட்டேன். நீங்கள் காண வேண்டாமா.. நட்புகளே….
கண்டு மகிழுங்கள்…

மக்கள் பதிப்பு 100/- தொடுவானம் பதிப்பகம், 0422-2671719

– ம.சக்திவேலாயுதம், திருநெல்வேலி

You may also like...

4 Responses

  1. surendran sambandam says:

    கவிதை விமரிசனம் இரண்டுமே நன்றாக இருக்கிறது

  2. ஹேமநாதன் says:

    இவ்வளவு நாள் சிறுகதை,நாவல் மட்டுமே திரு.ஜெயகாந்தன் எழுதி உள்ளார் என்று நிணைத்துக்கொண்டிருந்தேன்.
    நல்ல அறிமுகம்,வாழ்த்துக்கள்.

  3. தி.வள்ளி says:

    கவிஞர் அவர்கள் விமர்சனம் மிகவும் அருமை. மேற்கோள்காட்டியிருந்த கவிதை வரிகளே அற்புதம். அவர் கூறியபடியே புரட்சி எழுத்துக்களால் நம் மனதை கவர்ந்தவர் ஜெயகாந்தன் அவருடைய’ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘யாரும் மறக்கமுடியாது .இக்கவிதை நூலை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது விமர்சனம். பாராட்டுக்கள்…

  4. JothiBai says:

    அனைத்தும் அற்புத படைப்பு.