சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam.

sozha nila puthaga vimarsanam

மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி இந்த பதிவில் நூல் ஒரு பார்வையாக வாசிப்போம்.

கைவந்த கலை

நம்மை கற்பனை உலகில் பிரமித்து பயணிக்க வைக்கும் வல்லமை வரலாற்று நாவல்களுக்கும் மட்டுமே உண்டு. அதிலும் குறிப்பாக சில நாவல்களில் யானை, குதிரை, பல்லக்கு, ரதங்கள், பிரமாண்டமான மாளிகை, போர்த்திறன், கோபுரங்கள் என்று கற்பனை உலகில் பறக்கவைக்கும் யுக்தி சில நாவல் ஆசிரியர்களுக்கு கைவந்த கலை – sozha nila puthaga vimarsanam.

“கண்ணீர் பூக்கள்” கவிதை புத்தகத்திற்கு “சாகித்திய அகாதமி” விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மு மேத்தா பெரியகுளத்தில் பிறந்தவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஊர்வலம் – மு. மேத்தா

சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.

சோழ நிலா நாவலின் கதை

வரலாற்று நூலில் பொதுவாக கதாநாயகனை மையமாக வைத்து கதையை நகர்த்தாமல் வரலாற்று சம்பவங்களின் நகர்வில் கதையை நகர்த்துவது புதுமையாக இருந்தது.பாண்டியர்களிடம் நிலவிய உள்நாட்டு குழப்பங்களை பயன்படுத்தி தமிழகத்தை ஆள நினைக்கும் சிங்களர்களை இருவரும் ஒன்று சேர்ந்து வெல்லும் படலம் தான் சோழ நிலா நாவலின் கதை. கதை நகரும் காலம் கிபி 12ஆம் நூற்றாண்டு. பொன்னியின் செல்வனைப்போல ஆற்றோரமாக குதிரையில் வரும் வீரனை கொள்வதில் தான் கதை தொடங்குகிறது.

சோழர் படையை வெல்கிறது

கதாநாயகன் போல வலம் வரும் சேனை நாயகர், துரோகிகளுக்கு உதவி புரியும் ஆகவமல்லன் மற்றும் வீரபாண்டியன். சிறுவர்களாக குலோத்துங்கன, தியாகவல்லி. நாட்டியகாரியாக அறிமுகமாகி நாட்டுபற்றால் பல்லவரையருக்கு உதவி புரிந்து உயிர் விடும் மோகன சுந்தரி அவளது காதலன் இளந்தேவன் மற்றும் தியாகவல்லியை காதல் செய்யும் பாண்டிய இளவரசன் விக்ரமன் என அனைவருமே இக்கதைக்கு உயிரூட்டுகின்றனர்.

பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரின் அரியணை சண்டையை பயன்படுத்தி சிங்கள மன்னன் பராக்கிரம பாகு தமிழகத்தில் காலூன்றி சோழர்களை பழிவாங்க திட்டமிடுகின்றான். பகை, எதிர்பாராத கூட்டணி, துரோகம் என பல நிகழ்வுகளுக்கு பிறகு வலிமையான சிங்கள படை சோழர் படையை வெல்கிறது.

போர் வியூகம் – கதைக்களம்

தலைக்கு இரண்டு ஊர்களை தருவதாக அறிவித்த பரிசுக்கு ஆசைப்பட்டு நண்பர்களே துரோகிகளாகி மன்னனை எதிரியிடம் சிறைக்கு அனுப்ப , கதை வேறு கோணத்தில் பயணிக்கிறது. சிறையில் இருந்து மீண்டு வந்து ஆட்சியை பிடிப்பது கதையின் மறு பகுதியில் எழுதியிருப்பார் ஆசிரியர் – sozha nila puthaga vimarsanam.

போர் வியூகம், போர்க்கள காட்சிகள், கதைக்களம், முடிச்சுகள், திருப்பு முனைகள் என பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கியது சோழ நிலா (நாவல்) கதை.

– நீரோடை மகேஷ்

You may also like...

7 Responses

  1. Kavi devika says:

    மிக அருமை… நூல் விமர்சனமே காட்சிகளை கண்முன் கொண்டு வருகிறது… வாழ்த்துகள் மகேஷ்…

  2. M.Venkatasalam says:

    Nice story..

  3. Priyaprabhu says:

    நல்லதொரு விமர்சனம்.. அருமை..

  4. ஹேமநாதன் says:

    வாழ்த்துக்கள்…நல்ல அறிமுகம்

  5. தி.வள்ளி says:

    சரித்திர நாவல் என்றாலே பிரம்மாண்டத்தற்கும், கற்பனையை செறிவிற்கும் குறைவிருக்காது .அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது உங்கள் விமர்சனம் மிக அருமையாக வாழ்த்துக்கள் மகேஷ்

  6. pavithra says:

    arumai anna!!!

  7. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    அண்ணன் எழுதும் விமர்சனங்களுக்கு இந்த தம்பி அடிமை..
    நூல் வேண்டும் அண்ணா..
    வாழ்த்துகள்..