மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள்.
அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக
சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai.
இப்போதெல்லாம் என் மனதில் மழைக் காலம் இல்லாமலே போனது.
நீ என்ற என் வானம் விண்வெளிப் பயணம் சென்றதால்.உன் திருமணத்தில் நான் மணமகனாக,
உன் இறுதி ஊர்வலத்தில் நான் துணையாக,
என்று வாழ்ந்து வந்த என் நினைவுகளை,
கல்லறைக்கு முதல் பரிசு பெற அனுப்பியவளே.
நீ உன் வாழ்க்கையை வாழவில்லை,
உன்னை தான் உன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.manam kothi paravai kavithaiமணம் கண்ட என் உணர்வுகளை மதிக்காமல்,
பணம் கண்ட பாதையில் போறவளே !.

மரம் கொத்திப் பறவைகூட
மரத்தை காயப் படுத்தினாலும்
அதிலேயே தங்கி வாழும்.. ஆனால்
நீயோ என் மனதை கொத்திவிட்டு
பறந்து உன்வழிப் பயணம் செல்கிறாய்.

அழகிப் போட்டியில் உன்னழைகை உலகம் பார்த்து
முதல் பரிசு கொடுத்தாலும்,
என் மனதில் அங்கே நீ வெறும் கல் தான்.

என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்,
நீயும் , உன் அழகின் தரிசனங்களும் என்றும்
எனக்கு மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கும்
என் கரிசனங்கள் (உன் காதல்).

 – நீரோடைமகேஷ்
2012 April

Manam Koththip Paravai

Than Kaathali Oru Maadal Azhagi Aval Thanaku Kidaitha Vaippukkaaga Kaathalai Perithagak Karuthaamal, Kaathalan Ennangalai Mathikkaamal, Than Vazhiyil Pokiraal.

Antha Nilaimaiyil Kaathalanin Ennangalai, Pulampalkalai Kavithaiyaga Sitharithirukiren ippothellaam En Manathil Mazhaik Kaalam Illaamale Ponadhu.
Nee Endra En Vaanam Vinvelip Payanam Sendrathaal
Un Thirumanathil Naan Manamaganaga,
Un Iruthi Oorvalathil Naan Thunaiyaga,
Endru Vazhanthu Vantha En Ninaivukalai,
Kallaraikku Muthal Parisu Pera Anupiyavale.
Nee Un Vazhkkaiyai Vazhavillai,

Unnai Thaan Un Vazhakkkai Vazhndhu Kondirukiradhu.

Manam Kanda En Unarvukalai Mathikkaamal,

Panam Kanda Paathaiyil Poravale !.

Maram Koththip Paravaikoda
Maraththai Kayap Paduthinaalum
Athileye Thangi Vazhum.. Aanaal
Neeyo En Manathai Koththivittu

Parandhu Unvazhip Payanam Selkiraai.

Azhagip Pottiyil Unnazhagai Ulagam Paarththu
Muthal Parisu Koduththaalum,
En Manathil Ange Nee Verum Kal Thaan.
En Ennangal Thavaraga Irrukalaam,
Neeyum, Un Azhakin Tharisanangalum Endrum
Enakku Mattume Vendum Endru Adam Pidikkum
En Karisanangal (Un Kaathal).

You may also like...

1 Response

  1. Ramani says:

    முன்னுரை இல்லாவிட்டாலும் கவிதையின்
    உள்ளுணர்வை மிக த் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி
    படைக்கப்பட்ட கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்