திருமூலர் சித்தர்

18 சித்தர்களுள் முக்கியமானவரும், பலருக்கு குருவாக திகழ்ந்த திருமூலர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – tirumular siddhar

tirumular siddhar

இறைவனுக்குரிய எல்லா சக்திகளும் மனிதனுக்கும் உண்டு. அந்த சக்தி ஆன்மாவுக்குள் அடங்கி கிடக்கிறது . அந்த ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டால் மாபெரும் காரியங்களை சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் சித்தர்கள். உடம்பையும் மனத்தையும் அடக்கிக் கொண்டால் அட்டமா சித்திகளை பெறமுடியும் என்பதை சித்தர்களின் வாழ்வும் ரகசியமும் விண் நிலவைப் போல வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஞானம் என்பது ஆன்மாவின் சொரூபம் மாநிலத்தின் விரிவாகவே உலகப் பொருள்கள் காட்சி தருகின்றன. சித்தர்களுக்கெல்லாம் மூலவராக எண்ணப்பெறும் திருமூலர் யோகத்தில் இருந்து பாடிய தமிழ் மூவாயிரம் எனப்படும் திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்,வேதாந்தம்,யோகம், மந்திரம் தாந்திரீகம்,ரசவாதம்,சோதிடம், அறிவியல் என பல்துறை கருத்துக்களை சித்தரிக்கும் பொக்கிஷமாக வழங்கி சென்றுள்ளார். நாத சித்தர் எண்மர் என்ற வரிசையில் தாமும் ஒருவர் என்பதை நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம் என்று உறுதிப்படுத்துகிறார் திருமூலர்.

திருமூலர் தம்மைப் பற்றிக் கூறும் பொழுது

சித்தர்களில் முதலாமவரும் முதன்மையான வருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர் திருமூலர். கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர் சிவகணங்களில் முதன்மை பெற்ற நந்தீசரோடு வைத்து எண்ணப்படுபவர். திருமூலரை பற்றி கூறும் பொழுது,

“ நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிலர் என்னோடெண்பருமாமே” என்று கூறுகிறார்.

அற்புதங்கள் செய்து வந்தார்

திருமூலரின் வாழ்வியல் ரகசியங்கள் திருமூலருக்கு சுந்தரர் என்ற பெயரும் வழக்கத்தில் இருக்கிறது ஒரு முறை சுந்தரர் வான் மார்க்கமாக சஞ்சரித்து வரும் பொழுது ஒரு மலைச் சாரலில் பசுக் கூட்டம் ஒன்று ஓலமிட்டு அழுவதும் கீழே இறங்கி வந்து விசாரித்தார்..

சுந்தர அந்த கூட்டத்தின் மேய்ப்பனாக மூலன் என்பவன் சர்ப்பம் தீண்டி இறந்து விட்டதை அறிந்து தான் அந்த பசுக்கூட்டம் அழுகின்றது என்பதை அறிந்து ஆச்சரியம் கண்டு பின்னர் அந்த மூலரின் உடலில் கூடுவிட்டு பாய்ந்து அவனை உயிர் தப்பினார் தனியா பழைய உடம்பை தனது சீடன் குருவைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டார் மூலன் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சுந்தரர் மூலனின் மனைவி யுடன் வாழ வர மறுத்து அந்த இடையனின் உடம்பிலேயே இருந்து அற்புதங்கள் செய்து வந்தார்.

திருமூலர் கால ஆய்வு

தமிழர்களின் தலைவமராக விளங்கியவர் திருமூலர் .அதனால் நீண்டகால வாழ்ந்தவராக கருதப்படுகிறார். திருமூலர் திருவாவடுதுறையில் அரசமரத்தடியில் மேற்கொண்டு யோகம் பெற்றதாக கூறப்படுகிறது எழுகோடி யுகம் இருந்து எவரும் காணா எரிசக்தியை கண்டு மகிழ்ந்தவர் திருமூலர்.

திருமந்திரம் எனும் நூலை தமிழில் தருவதற்காகவே இறைவன் தன்னை படைத்ததாக திருமூலர் கருதினார் . யோக நிலையில் இருந்த திருமூலர் ஒப்பில்லாத ஏழு ஆதாரங்கள் விளங்குமாறு ஒளிநெறி பற்றி உள்ளும் புறமும் ஒன்றுபடுத்தி ஒளிமயமாக இருந்தார் திருமூலரின் காலத்தை வரையறுப்பதில் அறிஞர்கள் வேறுவேறு கருத்துக்களின் தர்க்கங்களையும் முன்வைக்கின்றனர் .

திருமூலரின் காலம் கிமு 6000 தொடங்கி கிபி 900 வரை ஒவ்வொரு அறிஞரும் வாதப்பிரதிவாதங்களை வைத்துள்ளனர். கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மனதில் குளத்தில் குளித்த உடன் தன் சரும நோய் நீங்கி இரணியவர்மன். ஆனால் அது பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலிய தங்கி வழிபாடு செய்தல் கண்டு குளத்தை புதுப்பித்தான் கோவில் கோவிலும் எழுப்பினார் இவ்வரலாற்றை ஓட்டை திருமூலர் வாழ்ந்த காலம் கிபி 6 ஆம் நூற்றாண்டு என்றும் வாதிடுகின்றனர்.

தேக தத்துவம் குறித்து திருமூலர்

குயவன் சக்கரத்தில் வைக்கப்பட்ட மண்ணை தான் விரும்பியது போல பல வகை பாண்டங்களாக வனைவதை போல எங்கள் இறைவனாகிய நந்தியும் இருக்கிறான் என்கிற ஒரு மனிதனின் ஆயுட்காலம் அவன் அடைந்த சுமக்க வேண்டிய நோய் நொடிகள் இவையெல்லாவற்றையும் உள்ளிட்ட எப்படிப்பட்ட வாழ்க்கை அவனுடைய வேண்டும் என்பதையெல்லாம் அப்பொழுதே கரு தாயின் உடலில் ஒரு பெரும் அக்காலத்திலேயே இறைவன் வைத்து விடுகிறான். உயிர்கள் தோன்றுவதற்கு முன் இந்த உலகின் மேற்பரப்பில் இந்த உலகத்தில் இறைவன் விருப்பப்படி அது இது என்று பல உயிர்களும் தோன்றின.

திருமந்திரம் பெருமை

இனிமை வாழ்விற்கு இன்பம் தருவதோடு முக்கிய இன்பத்தையும் வழங்கும் நூலாக விளங்குகிறது. மக்கள் அற நெறிகளை பின்பற்றி இறை உணர்வோடு உலகிற்கு பயன்படும் சிறந்த சமுதாய வாழ்வினை மேற்கொள்ள வேண்டும் என்று திருமூலர் அருளிய திருமந்திரத்தில் அமைந்துள்ளன திருமந்திரம் அன்பே சிவம் என்பதை அறிவிக்கும் அந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கிறது – tirumular siddhar.

இறையன்பு முன்பும் மக்களை நன்மையின் நீக்கும் வழிகள் என்று திருமந்திரம். எடுத்துரைக்கின்றது அன்பினால் வன்முறையற்ற இனிய சமுதாயம் மலரும் என்று எடுத்தியம்புகிறது திருமந்திரம் சாதிகள் குறிப்பிட்ட அளவில் தொழில் அடிப்படையில் தான் சாதிகள் தோன்றினால் திருமந்திரம் தீண்டாமை குறைகிறது சமுதாயத்தில் பல்வேறு நம்பிக்கைகள் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன.

அவற்றில் தீவினை நல்வினை ஆகியன குறிப்பிடத்தக்கன நல்வினை செய்வாய் சொர்க்கம் அடைந்தனர் தீவினை ஏற்றுவார் நடக்க முயலும் இயல்பு என்கிறது திருமந்திரம். இறைவன் உலகம் ஆகிய மூவரையும் இணைக்கும் பாலமே மதம் என்பதாகும்.

குருவருள் அன்றி திருவருள் இல்லை

சித்தர் பாடல்களில் குரு அல்லது ஆசான் மிகவும் உயரிய பெருமைக்குரிய மகுடத்தை பெற்றுள்ளார் . இறைவனே குருவின் வடிவாய் வந்த தோன்றியிருக்கிறார்கள். பொருளாகிய இறைவனை அடையும் மார்க்கத்தை உணர்த்தி அரும்பெரும் துணையாய் இருந்து குறிக்கோளை அடைய செய்பவர் குருநாதர். நீந்தி கடக்க முடியாத பிறவி பெருங்கடலை குருவின் துணையின்றி கடக்க முடியாது.

ஞான வழியில் செல்வதனால் மனம் செம்மையாகும் மனம் செம்மையானால் வாசியை யோகத்தில் நிற்கலாம் அண்டங்களின் தரிசனங்களை பற்றி திருமூலர் அண்டங்கள் எங்கெங்கு உள்ளது என்கிற விவரத்தை நந்திபகவான் எனக்கு எடுத்துரைத்துள்ளார், என்கிறார் திருமூலர் – tirumular siddhar.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நாம் வாழும் பூமி . இன்னும் இதுபோன்ற பல சித்தர்களின் வரலாற்றினையும் அவர்கள் செய்த சித்துக்களையும் பற்றி வரும் கட்டுரைகளில் காண்போம்.

You may also like...

4 Responses

  1. Kavi devika says:

    மிக அருமை… அனைவரும் குருவருள் பெற

  2. Nachiyar says:

    வாழ்க வளமுடன்… அற்புதமான பதிவு

  3. தி.வள்ளி says:

    கட்டுரை அருமை…சித்தர்கள் பற்றிய அரிய பல தகவலை அறிந்து கொள்ள முடிந்தது.சித்தர் வாழ்ந்த இப்பூமியில் வாழ்வது நம் கொடுப்பினை

  4. Rajakumari says:

    திருமூலர் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி