சம்பா ரவை பொங்கல்
சிறுகதை ஆசிரியர், கவிஞர், சமையல் வல்லுநர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்கள் வழங்கிய சமையல் குறிப்பு – samba ravai pongal
தேவையானவை
- சம்பா ரவை ஒரு கப் (சற்று பெரிய ரவை)
- சிறு பருப்பு கால் கப்
- மிளகு கால் ஸ்பூன்
- சீரகம் கால் ஸ்பூன்
- இஞ்சி ஒரு துண்டு நறுக்கியது
- கறிவேப்பிலை
- நெய் 2-3 ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
- நறுக்கிய காய்கறிகள் ஒரு கப் (கேரட் ,உருளைக்கிழங்கு, குடைமிளகாய் ,பச்சை பட்டாணி)
10). ஞ்சள் பொடி கால் ஸ்பூன்
செய்முறை
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில்சம்பா ரவை சற்று பெரியது (ரொம்பவும் பெரியதாக வேண்டாம்) மற்றும் சிறு பருப்பை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொண்டு, அதையும் குக்கரில் போடவும்… பின் நறுக்கிய காய்கறிகள், உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சேர்த்துக்கொண்டு… ஒரு கப் ரவைக்கு மூன்றரை கப் தண்ணீர் விட்டு… நன்றாக கலந்து விடவும். குக்கரில் மூன்று விசில் வைத்து, பின் தீயை குறைத்து, ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து, ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துருவலை தூவி.. நன்றாக கிண்டி இறக்கவும். (சற்று குழைவாக இருத்தல் நலம்)
மிகவும் சத்தான சம்பா ரவை பொங்கல், இதற்கு தேங்காய் சட்னி சரியானஜோடி..வயதானவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது மிகவும் சத்துள்ள உணவு – samba ravai pongal.
– தி.வள்ளி. திருநெல்வேலி
Healthy and tasty food.. Super 👌👌
அருமை அம்மா… மிகவும் பயனுள்ள ரெஸிபி… வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்… வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு…
பொங்கல் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி சகோதரிகளே..
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு ரொம்பி விடும்.ஜீரணமாவதும் எளிது.