தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

awarnes youth message quotes part 1

௨. ஒவ்வொரு வினாடி நிகழ்வுகளுக்கும் ஆண்டவன் ஏட்டில் காரணங்கள் பொறிக்கப் பட்டு இருக்கும், விதிக்கு காரணங்கள் தேடாதே !

௩. வாழ்க்கைப் பாதையில் தொலைந்து போகும் பகலிரவுகளை பார்க்கும் முன், நீ இழக்கும் ஆயுளின் நிமிடங்களைப் பார். போராடு ஆயுள் நிமிடங்கள் தீர்ந்து போகும் வரை.

௪. எழுதாத காகிதங்களைப் பார்க்க பார்க்கத் தான் “எழுத்தே” மூளையில்
வரிசை கட்டி நிற்கும்.நீயும் காலங்கள் இல்லாத நீரில் நடைபோடு, நல்வழிப் பாதையும் அதுவே.

௫. உள்ளம் மறக்க காதல், உலகம் மறக்க போதை என சிந்தையிழந்து வாழும் ஜடங்களைப் போல விநாடிகளை விலை பேசாதே.

– நீரோடைமகேஷ் 

You may also like...

1 Response