அம்மினி கொழுக்கட்டை

இந்த வார சமையல் புதன் பதிவில் அரோக்கியம் தரும் “அம்மினி கொழுக்கட்டை” செய்முறை வாயிலாக ஐஸ்வர்யா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப் 

தண்ணீர் – தேவைக்கேற்ப 

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

தாளிக்க

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – தேவைக்கேற்ப

காயப்பொடி – அரை டீஸ்பூன்

வறுத்து பொடிக்க

கடலை பருப்பு – 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

கருவேப்பிலை – சிறிது

இவை அனைத்தும் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, கரகரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்..

செய்முறை

அரிசி மாவில் சிறிது உப்பு, தேவையான அளவு வெந்நீர், தேங்காய் எண்ணெய் கலந்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு சிறிய அளவிலான உருண்டைகளாக உருட்டி பின்னர் இட்லி பானையில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் கிளறி இறக்கவும்..

You may also like...

7 Responses

  1. surendran sambandam says:

    சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்

  2. தி.வள்ளி says:

    எளிமையான சுவையான சிற்றுண்டி ..ஆவியில் வேக வைப்பதால் செரிமானம் எளிதாக இருக்கும் …அருமை பாராட்டுக்கள் சகோதரி

  3. Kavi devika says:

    மிக அருமை..வாழ்த்துகள்

  4. Thiyaa says:

    Looking colourfull and healthy tooo.. I will try it for sure!!

  5. Hema says:

    Super ,try pandren ma

  6. ராதிகா says:

    அம்மினி கொழுக்கட்டை அம்சமான கொழுக்கட்டை!

  7. Kanagadurga says:

    Wow! Arumai it came out well….. Healthy evening snack…..