நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam

nerisaiyil oorisai puthaga vimarsanam

இரட்டை பாவலர்கள்

உலகை எழுத்தால் ஆட்சி செய்பவர்கள் காலத்தை வென்றவர்கள் என்பர். அத்தனை எளிதில் வசப்படுவதில்லை எழுத்துகள் அனைவருக்கும். அந்ததந்த காலகட்ட நிலைமையை அழகாக எடுத்துக்கூறும் வல்லமை பெற்றவை படைப்பாளிகளின் எழுத்துகள்.அத்தகைய எழுத்துக்களைக் கொண்டு சொல்லாடலில் எதுகை மோனை நயந்து வெண்பாவில் வடித்த அழகிய கவிதைகள் படிப்பதற்கு மேலும் தமிழ்சுவை ஊட்டும்  வார்த்தைப் பூக்களால் தொடுக்கப்பட்ட “பா “ மாலைகள்…  

 “இரட்டை புலவர்களை நினைக்கவைக்கும் இவ்விரு இரட்டை பாவலர்கள் எழுதிய நூலுக்கு இரட்டை கவிஞர்கள் விமர்சனம் எழுத முயற்சித்தால் எப்படி இருக்கும். கவிஞர் கவியன்பன் பாபு மற்றும் கவிஞர் மீனாட்சி  சுந்தரம் அவர்கள் எழுதிய “ நேரிசையில் ஊரிசை” நூல் ஒரு பார்வையாக இக்கட்டுரையில் வாசிப்போம்.

மரபுச் செய்யுளாய் கலாச்சார கோவில்கள் மற்றும் ஊர்கள் என எதையும் விட்டு வைக்காமல் எழுதியது இரட்டைப் பாவலர்களின் எழுத்தாளுமையை காட்டுகிறது. புவலர் பெ.ராசு, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்,தொல்வியல் அறிஞர் பூங்குன்றன் ஆகியோரின் வாழ்த்துரை சிறப்புரையை பெற்ற இந்நூல்,இரு பெருங்கவிஞர்களின் படைப்பால் விளைந்ததால் இந்த இரு கவிஞரையும் இரட்டைப்புவலர் என்று புகழ்கிறார் புலவர் செந்தலை ந. கவுதமன். மேலும் தன்னுரையாக தன்னை பற்றி கவிஞர்கள்  தங்களுக்கு வெண்பா கிடைக்கப்பெற்ற சுய விளக்கத்தை சுவாரசியமாக கதையாக்கி தந்துள்ளது கூடுதல் சிறப்பு.

“எலி விரட்டும் பூனை இதன் பின்னே நாய்கள்
வழிஉருவாக்கும் வனத்தில் களிறு
நடந்து போன பாதை நமக்கின்று சாலையாம்
நடந்துபோய் பொள்ளாச்சி நோக்கு”
யானை தந்த வழியில் தான் பயணிக்கிறோம் நாம், வனமகள் தந்த பரிசு எழில் கொஞ்சும் இயற்க்கை அழகில் கட்டிப்போடும் பொள்ளாச்சி பற்றி இதைவிட சிறப்பானதொரு பா வழங்க இயலுமா என தெரியவில்லை.

“சேக்கிழார் நூலை சிறப்பித்த ஜானகியை
 நோக்கியர்  உண்டா நகரினின்று நோக்கிநிலம்
ஆண்டவர்  உண்டா உரைசுமந்த ஜானகியை
கண்டோரை கும்பிடும் என் கை”
“இந்நூல் வரலாற்றுப் பொன்னூல் மட்டுமல்ல. கவிதை செந்நூலுமாகிறது. ஒரு வகையில் கோவை காவியம் இது. கோவையில் இரட்டைப் புலவர்கள் எனக் கொண்டாடப்படத் தக்கவர்கள் கவியன்பன் பாபுவும், பா.மீனாட்சி சுந்தரமும்” என சிற்பி ஐயா கூறியது கூடுதல் சிறப்பு – nerisaiyil oorisai puthaga vimarsanam.

“ஒத்தக்கல் மந்தே உதகையெனும் நீலமலை
அர்த்தமற்ற சொல்லை அறிவாயா? – சித்தப்பன்
வீட்டிலே பெண்ணெடுக்கும் வெள்ளையர் ‘ஊட்டி’யென்றார்;
நாட்டு மொழியறியா நாவு”

தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள “ஒத்தக்கல்மந்து”, உதகமண்டலம் என்று மருவி வெள்ளையானால் ஊட்டி என்று பெயர் மாறிய கதை சொல்லும் வரிகள் மிக அருமை.  அந்த ஒத்தக்கல்மந்து (ஊட்டி) யின் தாயான நீலமலை (நீலகிரி) பற்றி பின்வரும் வரிகளின் சொல்லாடலும் கதை சொல்லும், கற்பனையில் பயணிக்க வைக்கும். இங்கே வெள்ளையன் கண்டறிந்த லண்டனை (ஊட்டி).

“சொர்க்கத்தின் நீலத்தை சூழ்ந்தணிந்த நீலமலை!
வெற்றி, முதற்சென்ற வெள்ளையர்க்கு! – சொர்க்கமென்றால்
லண்டன் குளிரென்று “கிண்டர்ஸ்லி” “விஸ்”ஸோடு
கண்ட இடம் நீல கிரி.

சகலமும் – நேரிசையில் ஊரிசை

“ஏழிசை வேந்தன் இசைத்த முதற்பாடல்
அலையயூர் பெற்ற அழகென்ன! – அலையூர்க்
காற்று முதன்முதலாய் கைப்பிடித்த(து) ஆண்குரலை,
‘ஏற்றதுணை டி.எம்.எஸ்’ என்று.
என திரைத்துறையை பற்றியும், கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ பற்றியும், இசைத்தலைவனின் முதற்பாடல் வரை அனைத்தும் அழகு. மேலும் ஆவாரம்பாளையம், கிணத்துக்கிடவு, சூலூர், வடகோவை, துடியலூர், வடவள்ளி, சிறுவாணி, ஒண்டிப்புதூர், வெள்ளலூர், மருதமலை , கோட்டையீசன் ஆலையம், ஜி.டி. நாயுடு என இவர்கள் எழுதாத விடயமே இல்லை எனலாம். மொத்தத்தில் “நேரிசையில் ஊரிசை” கொங்கு மண்டலத்தையே சுற்றிக் காண்பித்து விட்டது என்று பெருமிதம் கொள்ளலாம்.

– கவித்தென்றல் நீரோடை மகேஸ்


Nerisaiyil Oorisai Puthaga Vimarsanam


கொங்கு மண்ணைக் கொண்டாடிய தென்காசித் தமிழ்

கொங்கு மண்ணைக்கொண்டாட செல்லில் சொன்ன வெண்பாக்கள் என்ற அடைமொழியே…. நூலைப் படிக்கத் தூண்டுகிறது….பேச்சுவழக்கில் தமிழ் பல ஊர் நடைகளை கொண்டிருப்பது நாமறிந்ததே…. அதிலும் கொங்கு தமிழ் அனைவரையும் மரியாதைப்பாங்குடன் பார்க்கும் அழகிய “திரு” தமிழ் என்றால் மிகையல்லவே.

பல நவீன புதுக்கவிதைகளின் கால ஆட்சியில் இதுபோன்ற மரபு கவிதைகள் குறிப்பாக வெண்பாக்களின் உதயம் அரிது எனலாம்….. வெண்பா மாலையின் மணம் நுகர…. வாருங்கள் மணம்வீசும் கவிதைக்குள் தும்பியாய் வலம் வருவோம்….  பொதுவாக தங்கள் ஊரின் பெருமை பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை எனலாம். இருப்பினும் இவர்கள் தாங்கள் இருக்கும் ஊரின் சிறப்பை பெருமையை வெண்பா வாக பாடி களித்து இருப்பது மிக அருமை – nerisaiyil oorisai puthaga vimarsanam.

“கத்துக்கடல் போலின்று கண்டேன் பெரியகுளம்
“உத்தமச்சோழனின் பேரேரி- இத்தனைநாள்
செத்தமீன் நாற்றம் சிதைந்துவந்த உக்கடத்தில்
முத்துக் குளிக்கவோர் வாய்ப்பு.”
உக்கடத்தின் பெருமைதனை  பார்போற்ற கவிபடைத்த திறம் மிக அருமை.

“கண்ணியிழந்த பெண்மலையாள் கண்ணீர் உதிர்த்ததால்
பன்னீர் மடைநிரம்பி பாய்ந்தோ உண்மையில்
பல்நீர் மடையது பன்னீரும் அப்பொருள்தான்
பன்னி மடைதான் பிழை.”
 என்னே புலமை… கவிஞரின் திறமை… பலபுகழ் கொண்ட ஊரின் அருமை…

“கொல்லிமலை தந்தங்கள் கட்டிலுக்குக்காய் வாங்கவேண்டி
வெள்ளலூரில் ரோம்நகர்க்கு  வண்டிநிற்கும்_
மண்ணிலே தோண்டி மணிகள் கொல்லிமலை எத்தந்தம்
என்று சொல்லி விற்பார் சமர்.”
கட்டி தந்தங்கள் கொண்டு அலங்கரிக்கும் செல்வ செழிப்பு மிகுந்த ஊர் எங்கள் வெள்ளலூர் என்கிறார் கவிஞர்.

“அண்ணல் பெயர்கொண்ட அப்புரத்தை போய்ப்பார்த்தால்
தந்தையைக் காண்பாய் தடியோடு வெங்காயம்
அண்ண புரத்தில் அவர்க்கா சிலையில்லை
என்றய்யா கம்பெடுதாதார் இங்கு!!!”..
பெரியாரின் பெருமை பேசும் எங்களா ஊர் கண்டீரோ என உலகுக்கு எடுத்துரைக்கும் அருங்கவியிது.

ஒவ்வொரு ஊரின் பெருமைதனை அகிலம் போற்ற அழகாய்,நயமாய், திறமாய் எடுத்துக்காட்டிய கவியின் விதம் அருமை…. சொல்லாடல் அனைத்தும்  அற்புதம்.
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை நயந்து வரும் இடங்கள் மேலும் அழகு சேர்கக, ஒய்யாரமாய்  காட்சிதருகிறது.. இனிமைக் கொஞ்சும்  கொங்குத் தமிழின் மொழி.

எங்கும் எதிலும் எப்பொழுதும் இனிமை பயக்கும் தமிழே என்பதை கவி படைத்து அழகுற மரபோடு எடுத்துரைத்த கவிஞர் இரட்டை புலவர்களுக்கு வாழ்த்துகள்…. இதுபோல் இன்னும் பல நூல் வெளியிட்டு தமிழுக்கு அருந்தொண்டாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்…

– கவி தேவிகா, தென்காசி 

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    தட்டை கவிஞர்களின் நூலுக்கு இரட்டைக் கவிகளின் விமர்சனம் அருமை ..புதிய முயற்சி வாழ்த்துக்கள் ..