இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும்
மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக !

சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட
கண்ணில் படும் பயிர்களெல்லாம்
மரகதமே உன் வாசம் வீசிட.

irayilil unnai ninaithu

எதிர் வரும் இரயிலின் தடக் தடக்
சத்தம் நீண்டு கொண்டே போக!
நீ மட்டும் என் இதயத்தில் லப் டப்! லப் டப்!

உன் நினைவுகளின் தாலாட்டில் நானிருக்க
மரணமே சகித்துக் கொள்ளும்
என்னை நெருங்கிட ?

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. நல்லா இருக்குங்க …

  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்