மனதை பூட்டி வைத்தாலும்

நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும்
உன் மனக் கதவின் முன்
காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை ,
காதல் காரானாக.

உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம்
சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு
வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன்
என் பிராண வாயுவே நீ வரும் வரை .

manathai pootti vaithaalum

ஏற்றுக்கொள்வதில் நீ தாமதங்கள் காட்டுவதால்
என் நிலை பார்த்து அந்த தாமதங்கள் கூட
தாடி வைத்துக் கொண்டு வீதிகளில் திரிகிறது .

***************************************************************
என் காதலை தாமதங்களில் தங்க வைத்தவளுக்கு
மட்டும் கவிதை ரசனை இருந்திருந்தால்
அவள் என் மேல் காதல் கொள்ளாவிடில் கூட
அவள் மனம் காயப் பட்டிருக்கும்.
அவள் வருத்தங்களை விரும்பாத இவன்

– நீரோடைமகேஷ்

You may also like...

5 Responses

  1. Chitra says:

    அருமையாக எழுதி இருக்கீங்க….

  2. Maheswaran.M says:

    கருத்துரைக்கு நன்றி சகோதரியே

  3. கவிதை நல்ல இருக்கு . உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

  4. கவிதையில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமை சகோ

  5. ஹேமா says:

    ஓ…அந்தத் தாடி வச்ச மகேஷ் நீங்கதானா.எழுதின கவிதையை அவங்க படிக்கணும்.அப்பத்தான் உங்களைப் புரிஞ்சுக்குவாங்க !