சார்வரி வருட ராசி பலன்கள்

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – sarvari varuda rasi palangal

மேஷம் (Aries):

aries mesam


இந்த ஆண்டு மனதில் நம்பிக்கை பிறக்கும், எதையும் வெல்லும் ஆற்றல் பிறக்கும், எப்பொழுதும் பணப்புழக்கம் இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புரட்டாசி மாதம் தொடக்கத்தில் உடல் உபாதைகள் வரலாம், கவனம் தேவை. பணியாளர்களுக்கும் முன்னேற்றம் தரும் வருடமாகும். தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை நிலவும், மேலும் கடின உழைப்பு இழந்த சிலவற்றை மீட்டுத்தரும். கலைஞர்கள் வருடத்தின் பிற்பகுதியில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் அரசாங்க உதவியுடன் முன்னேற்றம் பெறுவார்கள். விவசாயம் செழிப்படைய புதிய வழி பிறக்கும். குலதெய்வம் மற்றும் சனி பகவான் வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த ஆண்டு குரு பகவான் மூலம் நன்மைகள் கிடைக்கும். மேலும் பல முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லை ஆகவே ராசிகாரர் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது, அண்டைவீட்டார் மத்தியில் ஒதுங்கி இருத்தல் நல்லது, முற்பகுதியில் குடும்பத்தில் அன்பு மேலோங்கும். பணியாளர்கள் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக தொடங்கினாலும் தாமதமாக எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்கள் வைகாசி மாதத்திற்கு பிறகு பெரிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய அத்தியாயம் படைப்பார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம், தவறாமல் மழைப்பொழிவை பயன்படுத்திக் கொள்ளவும். விநாயகர் வழிபாடு செய்யவும், ஊரடங்கு முடிந்ததும் முருகன் ஆலயம் சென்று வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வருடம் குருவின் பார்வை நன்றாக உள்ளது ஆகவே குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். முதல் ஓரிரு மாதங்கள் பணப்பற்றாக்குறை வரலாம் பிறகு அனைத்து பிரச்சனைகளும் மறைந்து மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் தடைபட்ட திருமணம் நடைபெறும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி அடைவார்கள். வருடத்தின் பிற்பகுதியில் வியாபாரம் மந்தம் அடைய வாய்ப்புள்ளது. கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் சேமிப்பில் மேலோங்கும். பைரவர் வழிபாடு செய்யவும், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வருடம் சனி பகவான் உங்கள் வாழ்வில் மேன்மை அடையச் செய்வார். பணப்புழக்கம் அதிகரிக்கும், வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும் பதவி உயர்வு கிடைக்கப் பெறும். கலைஞர்கள் வருடத்தின் பிற்பகுதியில் புதிய, பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் மந்தமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனினும் முயற்சி வெற்றி தரும். விவசாயத்தில் எதிர்பார்ப்பை விட கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறும். கார்த்திகை மாதம் முருகனுக்கு அபிஷேகம் செய்யவும். ஊரடங்கு காலம் முடிந்ததும் அருகிலுள்ள மலை கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வருடம் குருபகவான் சாதகமான பலன்களை செய்வார். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும், சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரிந்து சென்ற உறவுகள் ஒன்று சேரும். முதல் ஓரிரு மாதங்கள் வேலைக்குச் செல்லும் பெண்கள் கவனமாக செயல்படவும். புரட்டாசி மாதம் முதல் உடல்நலத்தில் கவனம். தேவையான வங்கி கடன் எளிதாக கிடைக்கும், தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் கூடுதல் பொறுப்புகளையும், பதவி உயர்வையும் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வழியில் வருமானம் உயரும். மாணவர்கள் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்கவும். விவசாயம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் மேலும் மழைப்பொழிவை பயன்படுத்திக் கொள்ளவும். பிரதோஷம் தோறும் சிவாலய வழிபாடு செய்யவும், மேலும் குல தெய்வத்திற்கு அர்ச்சனை செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

வருடத்தின் ஆரம்பத்தில் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம். சுற்றத்தில் மன உளைச்சல் வரலாம் ஆனால் சுதாரித்து செயல்பட்டால் முழு வெற்றி கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் முன்னேற்றம் காணப்படும். பணம் வரவு செலவு சிறப்பாக இருக்கும், புனித தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் வெற்றி நடைபோடும். கலைஞர்கள் வாழ்வு திண்டாட்டமாக இருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய வருடமாகும். குருபகவான் வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வருடம் சனி பகவான் கருணையில் பல சாதனைகள் படைக்கலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டில் சீதனங்கள் வர வாய்ப்புள்ளது. பணியாளர்கள் புதிய பதவி உயர்வுடன் சலுகையும் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்பாக செயல்படும். கலைஞர்கள் மிகவும் முயற்சி எடுத்து பணியாற்றினால் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். மாணவர்கள் புதிய முயற்சி வெற்றி கிடைக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு செய்யவும், சூரிய நமஸ்காரம் செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வருடம் குரு பகவான் சாதகமான பலன்களைத் தருவார். பணவரவு நன்றாக இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், முதல் மூன்று மாதங்கள் கணவன் மனைவியிடையே சச்சரவுகள் வரலாம். வீட்டின் உடமைகளை களவு போகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும். பணியாளர்களுக்கும் முன்னேற்றம் தரும் வாரமாகும். வியாபாரிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி வெற்றி பெறலாம். விவசாயத்தில் நெல் மற்றும் மஞ்சள் அதிக லாபம் ஈட்டித்தரும். வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாடு செய்யவும், மாதம் ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

முதல் இரண்டு மாதங்கள் பொறுமையாக செயல்படவும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், பிறந்த வீட்டின் உதவி தேடி வரும். பணியாளர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் செல்வாக்கு உயரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும், அதிக முயற்சி எடுத்தே வெற்றி பெற வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு வெற்றி தோல்வி மாறி மாறி  கிடைக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் நவகிரக வழிபாடு சிறப்பு தரும், குலதெய்வ வழிபாடு சங்கடங்கள் விலகி நிற்கும் – sarvari varuda rasi palangal.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வருடம் ராகு பகவான் நன்மையே செய்வார். பகைவர் சதியை முறியடித்து வெற்றி பெறுவீர்கள், தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. முதல் 2 மாதங்களுக்கு பிறகு தடைகள் விலகி பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் முயற்சி எடுத்தால் எதையும் சாதிக்கலாம். வருடத்தின் முற்பகுதி நல்ல லாபம் கிடைக்கும், பிறகு கவனம் தேவை. கலைஞர்களுக்கு வருடத்தின் முற்பகுதி பாராட்டுகள் குவியும். மாணவர்கள் உற்சாகம் பிறக்கும் வருடம் ஆகும். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும். பெருமாள் வழிபாடு செய்யவும். புரட்டாசி வழிபாடு மேலும் முன்னேற்றம் தரும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வருடம் குரு மற்றும் சனி பகவான் கள் நன்மை செய்வார்கள். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உள்ளது, மேலும் பல சாதனைகள் படைக்கும் சூழல் தேடி வரும், பிள்ளைகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பெண்கள் புதிய உற்சாகத்துடன் செயல்படுவார்கள். தடைபட்ட திருமணம் நடந்தேறும். பணியாளர்கள் முற்பகுதியில் நிதானமாக செயல்படவும் பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும், இருப்பினும் மறைமுக போட்டிகள் இருக்கும். கலைஞர்கள் வருமானம் உயரும். மாணவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். பிரதோச வழிபாடு கட்டாயம் தேவை.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வருடம் சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய பகவங்கள் சாதகமாக உள்ளனர். ஆண்டின் முற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும் சிக்கனம் தேவை ,இருப்பினும் ஆண்டின் பிற்பகுதியில் நல்ல பணவரவு இருக்கும், தேவைகள் பூர்த்தி ஆகும், வீடு கட்டும் யோகம் உள்ளது, உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்படைவார்கள். பணியாளர்களுக்கு அவ்வப்போது இடையூறுகள் வந்தாலும் சிறப்பான முன்னேற்றம் தரும் வாரமாகும். வியாபாரம் புரட்டாசி மாதம் முதல் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் முன்பு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் சீரான வருமானம் இருக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கவும் மேலும் முருகப் பெருமானை வழிபடவும் – sarvari varuda rasi palangal

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...