தெரிந்து கொள்வோம் பகுதி -2

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

சில வித்தியாசமான தகவல்கள்

வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை, பௌர்ணமி ,வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும், குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும் – Therinthu konvol.

விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)… இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.

therinthu kolvom part 1

தொட்ட சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம், இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள்.

கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார். ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று ,ஆயுள் தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் ).

பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும் .

மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும்). கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், (பதப்பட்ட பால் வேண்டாம் ), அல்லது இளநீரை தரவேண்டும், இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.

எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும் – Therinthu konvol.

You may also like...

1 Response

  1. Boomadevi says:

    காய்ந்த கடவுளுக்கு சாற்றிய வில்வம் அருகம்புல் இலைகளை தூபத்தில் இடுவது நல்ல யோசனை.மருத்துவ குணம் நிறைந்த அதன் வாசனை கடவுளுக்கும் நமக்கும் நல்லது.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *