ஆஞ்சநேயருக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை ஏன்?
அனுமன் (ஆஞ்சநேயர்) சிறு வயதில் பார்ப்பதற்கு எதோ ஒரு பழம் போல காட்சி தந்த சூரியனை தன் கையில் பிடித்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த அவரை தினமும் சூரியன் கவர்ந்துவிட்டது.
வாயு புத்திரன்
வாயு புத்திரரான இவருக்கு இந்த பழம் அடுத்த கணமே கையில் வந்துவிட நினைத்து வாயு வேகத்தில் பறக்கத் தொடங்கினார்.
இந்த பச்சிளம் பாலகன் இப்படி பறந்து செல்வதை பார்த்து தேவர்கள் திகைத்தனர். வாயு புத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க இயலவில்லை.
ராகு கிரகணம்
அந்த சமயம் ராகு (கிரகம்) பகவானும் சூரியனை பிடித்து கிரகண காலத்தை உண்டு பண்ண பயணித்துக் கொண்டு இருந்தார். ஆனால் அனுமன் வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.
சூரியனை பிடிக்கும் இந்த போட்டியில் அனுமன், ராகு பகவானை வெற்றி பெற்றார். இருந்தாலும் கிரகண காலத்தில் பிடித்து ஆக வேண்டும் என்பதால், முடிவாக அனுமனுக்கு ராகு பகவான் ஒரு அங்கீகாரம் கொடுத்தார்.
உளுந்து மாலை
அதாவது தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப்பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வழிபடுகிறாரோ! அவரை எந்த காலத்திலும் தான் பிடிக்கப்போவதில்லை என்றும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும் என்றும் உறுதி அளித்தார்.
அந்த உணவுப்பண்டம் தனது உடல் போல வளைந்து நெளிந்து இருக்கவேண்டும் என்றும், உளுந்தினால் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
உளுந்து குளிர்ச்சி, உளுந்தினால் வடை செய்து ராகு தோஷத்தில் பாதிக்கப்பட்டவர் மாலையாக சார்த்தி வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
அனுமனிடம் ராகு கேட்டுக்கொண்டதன்படி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்துகொண்டே இருக்கின்றது.
தென்னிந்தியாவில் உப்பளங்கள் அதிகம் ஆகவே இங்கு உளுந்து, மிளகுடன் சேர்த்து வடையாக சார்த்தப்படுகிறது. வட இந்தியாவில் கரும்பு அதிகம் ஆகவே ஜாங்கிரி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
மேலும் சிலர்,
உளுந்து படைப்பதால், வேண்டுவோரை குளிர்விக்கும். சனி மற்றும் ராகு கிரகங்கள் பாதிப்புக்கு உள்ளானோருக்காக வழிபாட்டு முறையாகும். நேரடியாக அந்த கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட உளுந்து படைப்பதைவிட; ஆஞ்சநேயருக்கு உளுந்து வடைமாலை சாற்றி வழிபட, ஆஞ்சநேயர் வாயிலாக அந்த கிரகங்களை குளிர்விப்பது சுலபம். எனவே அனுமனுக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
Useful information.. thank you
காரணம் புரிந்து காரியம் (வழிபாடு,பக்தி) செய்வோம்.பலன் பெறுவோம்.
நன்றி.