வார ராசிபலன் பங்குனி 16 – பங்குனி 22

எந்த சோதனையையும் எதிர்கொள்ளும் வல்லமையை கடவுள் தர வேண்டும். ஆலயம் சென்று வழிபட இயலாதவர்கள் மனதில் வேண்டிக்கொள்ளலாம் – rasi palangal march 29 – april 04 .

aries mesam


மேஷம் (Aries):

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் பணி உச்ச கட்டத்தை எட்டும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் சிறப்பு அடைவார்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி அடைவார்கள். விவசாயம் லாபகரமாக இருக்கும். நவக்கிரக வழிபாடு செய்யவும் – rasi palangal march 29 – april 04.


taurus rishabam

ரிஷபம் (Taurus):

சுக்கிரன் பகவான் நன்மையே செய்வார். வீட்டின் ஆடம்பர தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. பணியாளர்கள் அரசாங்கத்தால் நன்மை அடைவார்கள். தொழில் வியாபாரம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர்களின் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் அரசாங்க ஆதரவு பெருவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பு மூலம் லாபம் ஈட்டும். ராகு பகவான் வழிபாடு செய்யவும்.


gemini mithunam

மிதுனம் (GEMINI):

புதன் பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார் பிரச்சனையை மறையும். உறவினர் வருகை தீமைகள் முடியும். பணியாளர்கள் நன்மையடைவார்கள். தொழில் வியாபாரம் போதிய வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த அளவு குறையும். மாணவர்கள் வெற்றியை சேர்ப்பார்கள். விவசாயம் விரயத்தில் முடியும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


cancer kadakam

கடகம் (Cancer):

குரு பகவான் நன்மையே செய்வார். பணத்தேவை பூர்த்தியாகும். எங்கும் எதிலும் கட்டுப்பாடு தேவை. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் வழக்கமாக சம்பளம் பெறுவார்கள். தொழில் வியாபாரம் சராசரி வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில். மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். விவசாயம் சீரான வருமானம் கிடைக்கும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


leo simmam

சிம்மம் (LEO):

குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் நன்மை செய்வார்கள், செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் நிம்மதியடைவார்கள். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை பெறுவார்கள். விவசாயம் லாபம் ஈட்டித்தரும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


virgo kanni

கன்னி (Virgo):

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக இருக்கும், குடும்பத்தின் செலவு அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், எதிலும் கவனத்தை பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் கூடுதல் சலுகை பெறுவார்கள். தொழில் வியாபாரம் போதிய வருமானம் இருக்கும். கலைஞர்கள் வாழ்வு மதில்மேல் பூனையாக இருக்கும். மாணவர்கள் சிரமப்படாமல் வெற்றி காண்பார்கள். விவசாய விளைபொருட்களின் விலை உயரும். பெருமாள் வழிபாடு செய்யவும்.


libra thulam

துலாம் (Libra):

புதன் பகவான் நன்மையே செய்வார். தேவைக்கேற்ப பண வரவு இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் சிரமப்பட நேரிடும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். மாணவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். விவசாயம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். சிவ வழிபாடு செய்யவும் – rasi palangal march 29 – april 04


scorpio viruchukam

விருச்சிகம் (Scorpio):

குரு பகவான் உயர்வான பலன்களை கொடுப்பார். தேவைகள் பூர்த்தியாகும், பெற்றோர்கள் சிறப்படைவார்கள், கட்டுப்பாடுகளுடன் இருக்கவும். பணியாளர்கள் செல்வாக்குப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் நன்மைபயக்கும். கலைஞர்கள் புதிய பாதையில் செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். விவசாயம் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. நவகிரக வழிபாடு செய்யவும்.


sagittarius thanusu

தனுசு (Sagittarius):

குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் நன்மை செய்வார்கள். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் திருமண நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது, ஆயுள் பலம் நீடிக்கும். பணியாளர்களுக்கு வருமானம் உயரும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும். தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


capricorn magaram

மகரம் (Capricorn):`

புதன் பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், பழைய பிரச்சனைகள் மறையும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியாளர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்களுக்கு சீரான வருவாய் கிட்டும். மாணவர்கள் தேர்வு எழுதாமல் தரம் உயர்த்த படுவார்கள். விவசாயம் லாபம் உயரும். குலதெய்வ வழிபாடு சிறப்பு தரும்.


aquarius kumbam

கும்பம் (Aquarius):

புதன் பகவான் நன்மை செய்வார். பணத்தேவை நிறைவேற்றப்படும், குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும், விட்டுக் கொடுத்து போவது நல்லது. பணியாளர்கள் விரையத்தை எதிர்கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கலைஞர்கள் வருமானம் உயரும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விவசாயம் விரயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


pisces meenam

மீனம் (Pisces):

குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் நன்மையே செய்வார்கள், தேவைக்கேற்ற பணம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். பணியாளர்களை அரசாங்க ஆதரவு பெறுவார்கள். தொழில் வியாபாரம் சுமாரான பலனையே ஈட்டித் தரும். கலைஞர்கள் திறமை புகழ் கிடைக்கும். மாணவர்கள் நன்கு முயற்சி செய்ய வேண்டும். விவசாயம் உயரிய லாபம் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்யவும்.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

rasi palangal march 29 – april 04

சென்ற வார பலன்

வார ராசி பலன்கள் தொகுப்பு

You may also like...