வார ராசிபலன் வைகாசி 09 – வைகாசி 15

வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-23 to may-29.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மனதில் வீண் குழப்பங்கள் உருவாகும். பணவரவு நன்றாக அமையும். குடும்ப அந்தஸ்து உயரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் சிக்கல் இருக்காது. கலைஞர்களுக்கு கடன் தொல்லை மறையும். மாணவர்களுக்கு ஆசிரியர் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்தல் நன்று.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். ஆன்மீக செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் நன்மைகள் எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் பேச்சாற்றலால் காரியம் சாதிப்பார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் லாபம் உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். காரிய தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணவரவு சுமாராக அமையும். பிள்ளைகள் நன்கு ஊக்கமளிப்பார்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்ட நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீண் பிரச்சினைகள் அகலும். பகைவர் மத்தியில் கவனமாக செயல்படவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் வீண் அலைச்சல் எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் வருவாய் குறையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் பிரயாணத்தின் போது கவனம் தேவை. விவசாயத்தில் நஷ்டம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். கடின உழைப்பு இருக்கும். சுப செலவுகள் ஏற்படலாம். சற்று விரையம் அடைய வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் பாராட்டை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். வியாபாரிகள் சுமாரான வருமானம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் சுமாரான வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். நண்பர்கள் உதவி கிடைக்கப் பெறும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய பாக்கிகள் தாமதமாகலாம். பணியாளர்கள் அதிக பொறுப்பு அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் உச்சம் அடைவார்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். காரிய தாமதம் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்ப குழப்பங்கள் நிலவும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் சுமாரான வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு கிடைக்கும். மாணவர்கள் முழு கவனம் செலுத்தவும். விவசாயிகள் பாக்கியசாலியாக திகழ்வார்கள். 
பரிகாரம்: கிருஷ்ணன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். ஆயுள் நீடிக்கும் புதிய நண்பர்கள் இணைவார்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சராசரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரிகள் கடுமையான உழைப்பு தேவை. கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எதிலும் கவனமாக செயல்படவும். எந்த செயலையும் சற்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நிம்மதி குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்தி பயன்படுத்தப்படும். கலைஞர்  வாழ்வில் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்ப ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருளாதாரம் பற்றாக்குறை நிலவும். வீண் செலவுகள் உருவாகும். குடும்ப குழப்பங்கள் ஏற்படலாம். பணியாளர்கள் தயக்கம் காட்டுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். மாணவர்கள் ஒற்றுமையுடன் செயல்படவும். விவசாயம் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் காரியம் வெற்றி அடையும். பணவரவு நன்றாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பூமி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பணியாளர்கள் சிந்தித்து செயல்படவும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல ஆர்வம் காட்ட வேண்டும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். கடன் தொல்லைகள் மறையும். புதிய சொத்து வாங்க யோகம் உள்ளது. குழந்தை பாக்கியம் அமையப்பெறும். பணியாளர்கள் சற்றுப் பணிவாக இருக்க வேண்டும். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குறைந்த வருமானம் எதிர்பார்க்கும்.
பரிகாரம்: காலை நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும் rasi-palangal may-23 to may-29.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    அனைவருக்கும் நன்மை அளிக்கட்டும்