ஆத்தங்கரை ஓரம் நூல் ஒரு பார்வை

தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam.

aathangarai oram puthaga vimarsanam

புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று பல தொழிநுட்ப மேம்பாடுகள் இருந்தாலும் புத்தகத்தை வாங்கி ரசித்து படிப்பது என்பது தனி சுகம்..அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் உணர்வுகள் புரியும்… ஆம் அப்படியொரு ஒரு நாவலை படித்தபோது ஏற்பட்ட மன ஓட்டங்களை உங்களோடு பகிர்வதில் மகழ்கிறேன்.. இறையன்பு அவர்கள் எழுதி,நியூ செஞ்சரி புக் ஹவுஸ் வெளியிட்ட,திருப்பூர் தமிழ் சங்க பரிசுபெற்ற “ஆத்தங்கரை ஓரம்” என்ற நாவல் பற்றிய நூலாய்வை காணலாம்.

நகர்ப்புற வாழ்வை விரும்பவில்லை

ஆத்தங்கரை ஓரத்து சிந்தூர் கிராம மக்களின் எழில்மிகு வாழ்வை காட்சிபடுத்துகிறது நாவல். கதை முழுவதும் கிராமத்து வாசனையும் ஆத்தங்கரையின் சலசலப்பும்,மலைக்குன்றுகளின் தோற்றம்,பசுமை போர்த்திய வயல்வெளிகள் , மரங்களின் இன்னிசை என்று ஒட்டுமொத்த கிராமத்தைனும் மனக்கண்முன் காட்சிப்படுத்துகிறது. நாவல்.கதை சித்தூர் நதிக்கரையிலுள்ள மக்களை இடம்பெயர்ந்து நகருக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் கேட்நடுக்கொள்ள,சித்தூர் மக்களோ முடியாது என மிகுந்த வருத்தத்தோடு கூறுகின்றன்ர்.

கதைகளம்

சிந்தூரை சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நன்மை ஏற்படும் பொருட்டு அணை கட்ட தீர்மாணித்ததால் அரசாங்கம் சித்தூர் மக்களை பாதுகாப்பான இடம் நோக்கி இடம் பெயர ஆணை வழங்கியது. ஆனால் சித்தூர் மக்களுக்கு பெரிதாக விருப்பமில்லை. நகர்ப்புற வாழ்வை அவர்கள் விரும்பவேயில்லை. கனவை வன்மையாக எதிர்த்தனர். ஊர்த்தலைவரான கோவிந்த் பாயி, அவரது மகன் சமன், ராதா என இன்னும் மக்கள் கூட்டனி சேர்ந்து அணை கட்டுவதை எதிர்க்க… கதைகளம் சூடு பிடிக்கிறது…ஒவ்வொரு கதாபாத்திரையும் நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் எனலாம்.

அரசா? சிந்தூர் மக்களா?

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது அரசா? சிந்தூர் மக்களா? இதற்கிடையில் ஏற்படும் இழப்புகள் மனம்தளராமல் தான் மேற்கொண்ட முயற்சியில் கவனமாயிருத்தல், என்று கதைகளம் விறுவிறுப்பாக நகரும் விதம் நேர்த்தி.உண்மை சம்பவத்தை சற்று கற்பனை மெருகூட்டி எழுதுவதில் ஆசிரியரின் நூலுக்கு சபாஷ் போடலாம்.

சஞ்சய்,சுனில் என இன்னும் நிறைய நெஞ்சில் நிற்கும் கதைமாந்தர்களால் இந்நாவலுக்கு கூடுதல் சிறப்பு.கதையின் இறுதியில் என்ன நேர்ந்தது? யாருக்கு வெற்றி? என்பதை அறிந்துகொள்ள படித்து தான் பாருங்களேன்….

எனவே தான் அணிந்துரை வழங்கிய ஜெயக்காந்தன் அவர்கள், ”யதார்த்த நிலையை மையமாகக் கொண்டு மேன்மையாக எழுதப் பட்டிருக்கும் இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட இலக்கியம்” என்கிறார் – aathangarai oram puthaga vimarsanam.

நீங்களும் கிராமவாசனையை நுகர தயாராகிவிட்டீர்கள் என எண்ணுகிறேன்… வாசிப்போம் அதையே மனதால் நேசிப்போம் .

– கவி தேவிகா,தென்காசி

You may also like...