பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 11
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 11
லவம் பல வெள்ளமாம்
லவம் என்ப அயலார் முன்
மனக்கூச்சம் என்பதாக
அதனிறுதி பலனெல்லாம்
வெள்ளத்தால் ஏற்படுகிற
அழிவென அறிவீராயின்
அடுத்தவர் முன் நாணுதல்
அழகல்லவே
லாவகம் பயிற்சி செய்
எந்த செயல் செய்திடினும்
ஏனையோரை விட சற்றே
சிறப்பெனவும் வித்தியாச
வேறுபாடென அமைத்தல்
சிறப்பென்றே அறிந்தால்
அதற்கான சிறப்புப்பயிற்சி
வேண்டும் தானே
லீலை இவ்வுலகு
இதுவே விநோதமென்று
பட்டியலிடப்படவேண்டிய
நிகழ்வுகள் நாள்தோறும்
மாறிவரும் இயல்புடையது
இவ்வுலகென அறிந்து
அதனிலிருந்தும் கற்றுக்
கொள்வது ஆயிரமாமே
லோக நூல் கற்றுணர்
லோகமென்பதை உலகம்
என கொள்ளலாமாயினும்
உலோகமெனும் தாதுப்
பொருட்களின் பொருளை
உணர்த்தும் என்பதாலே
அத்துறை நூற்கள்
கற்றல் அவசியம் தானே
லௌகிகம் ஆற்று
உலகப்போக்கை உணர்ந்து
நடத்தல் தான் லௌகிகம்
என்பதனை உணர்ந்தே நீ
உன்னை மேம்படுத்திடவே
சுற்றியே உற்றுப் பார்த்து
விழிப்புடன் இருத்தலுமே
வேண்டுமன்றோ
வருவதை மகிழ்ந்துண்
உண்ணுதல் உயிர்வாழ்தல்
மட்டும் என எண்ணுவீர்கள்
நீங்களெனில் பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் இதுவே
என அறிந்து; வருவதை
பகிர்ந்துண்ண வேண்டும்
என்பேனே
வான நூற்பயிற்சி கொள்
வானநூல் சாத்திரம் என
எம்பழந்தமிழர் கண்டறிந்து
சிறந்து விளங்கியதொரு
துறை எனவே நாமெலாம்
அச்சாத்திரத்தில் பயிற்சி
கொள்ளல் அவசியமேயாம்
அதன் பலன் பெற்றிடவே
விதையினை தெரிந்திடு
விதையினை தேரந்தெடு
தெரிந்திடு என்பதெல்லாம்
விவசாயத்துக்கு மட்டும்
அல்ல நம் வாய்ச்சொற்கள்
நற்செயல்கள் எவரெவரை
சென்றடையவேண்டுமென
தெரிதல் தானாகும்
வீரியம் பெருக்கு
வீரியம் கொள் செயலதன் இறுதி;
வெற்றி என்றாக எச்செயல்
செய்தாலுமதில் வீரீயம்
காட்டுதலே விவேக
செயலென்பதாலே என்றும்
வேண்டுமே வீரியம் என்றே
உணர்த்தவும் வேண்டுமோ – bharathiyar puthiya aathichudi 11
வெடிப்புறப் பேசு
வெடிப்புறப் பேசுவதென
எல்லோருக்கும் எளிதில்
வராத ஒன்றென உணர்
எவர் சொல்லில் மாசு மரு
அற்ற உண்மையுறைந்து
இருக்கிறதா அவர் பேச்சே
வெடிப்புற வெளிவரும்
வேதம் புதுமை செய்
வேதம் எனும் மறைநூல் எல்லாம்
மானுடர்க்கு நலம் பயக்க
எழுந்ததெனிலதில் புதுமை
கருத்துகளை இடம் பெறச்
செய்தலும் பயனில் பழயன
கழித்தல் நன்மை பயக்கும்
நற்செயலே
வையத் தலைமை கொள்
வையத்தில் தலைவனென நீ
உன்னை உருவாக்க
எளிமை பணிவு எவரும்
எளிதில் அனுகும்
தன்மையென பேச்சிலும்
கனிவும் உண்மையுமாயின்
வையம் உன் காலடியில்
வையத் தலைமை கொள்
வையத்தில் தலைவனென
உன்னை நீயே உருவாக்க
எளிமை பணிவு எளிதென
அனுகும் தன்மை பேச்சில்
கனிவும் உண்மையுமாக
வையம் உன் காலடியில்
வந்த மரும் காலமதே
– மா கோமகன்