என் மின்மினி (கதை பாகம் – 50)

சென்ற வாரம் சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பதாவது (50) வாரத்தில் அடியெடுத்து வைக்கும் மின்மினி தொடர்கதை வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-50

50 வது வாரம்

சரிசரி சலிச்சுக்காதே.இன்னிக்கு மட்டுமாவது நாம சண்டை ஏதும் இல்லாமல் ஹேப்பியா இருக்கலாம் என்ற படி காபி ஷாப்க்குள் இருவரும் நுழைந்தனர்…

ம்ம் எனக்கு காஃபி மட்டும் போதும்.உனக்கு வேணா வேற எதாவது ஆர்டர் பண்ணிக்கோ என்றாள் ஏஞ்சலின்… ஏன் அப்படி சொல்லுறே.வழக்கமா பொளந்து கட்டுவீயே இன்னிக்கு என்ன விரதமா,பரவாயில்ல சாப்பிடு என்றான் பிரஜின்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.கொஞ்ச குண்டாகி விட்டதுப்போலே ஒரு பீல்.அதுதான் கொஞ்ச டயட் மெயின்டெயின் பண்ணலாம்னு யோசிக்கிறேன் என்றவுடன் ,, ஓகோ சரி சரி, பேசாம நீ ஜிம்முக்கு போயி ட்ரை பண்ணி பாரே என்று சொல்லி லேசாக சிரித்தான் பிரஜின்.

என்னடா உண்மையா சொல்றீயா இல்ல கிண்டல் பண்றீயா என்று செல்லக்கோபமாக அவனை பார்த்தாள் ஏஞ்சலின் சரி தெரியாமத்தான் கேட்குறே என்ன சொன்னாலும் நம்புறீயே…ஐ லைக் வெரி மச் உன்ன போலே தான் இருக்க ஆசையா இருக்கு…என்கூட சண்டை போட்டாலும் வந்து வந்து பேசறே. தேங்க் யூ சோ மச் என்றான் பிரஜின்.

ஹே போடா காஃபி ஆறுது முதலில் சாப்பிடு என்று பேச்சை மாற்றினாள் ஏஞ்சலின்…
ஆறிபோன காஃபியினை அவளை பார்த்து சிரித்தவாறே அமிர்தம் போலே உள்ளே தள்ளினான் பிரஜின்.
சரி வா கிளம்பலாம்,நேரம் வேற கடகடவென ஓடுது.இப்போவே கிளம்பினால் தான் நான் சரியா நைட் 8 மணிக்கெல்லாம் ஹாஸ்டலுக்கு போயி சேர முடியும் என்று அவனை வேகப்படுத்தினாள் ஏஞ்சலின்…

அடிப்பாவி ஹாஸ்டல் விட்டு வெளியே வந்து சரியாக 1மணிநேரம் கூட ஆகவில்லை.அதுக்குள்ளே ஹாஸ்டலுக்கு திரும்பி போறத பத்தி பேசறே என்று கோபித்துக்கொண்டான் பிரஜின். சும்மா உன்னை வெறுப்பேத்தி பார்த்தேன் என்று சிரித்தவாறே இருவரும் காஃபி ஷாப்பினை விட்டு கிளம்பினர்…

டூவீலர் பயணம் மீண்டும் தொடர எங்கே போகிறோம் சொல்லுடா என்று பிரஜினை பார்த்து கேட்டாள் ஏஞ்சலின். ப்ளீஸ் கொஞ்ச பொறுமையாக இரு.போன உடனே பார்க்கத்தானே போகிறாய் என்று அவளின் வாயை அடைத்தான் பிரஜின். எதை கேட்டாலும் என்னை பேசவிடாம ஆக்கிவிடுவானே,எங்கேயாவது போ…போனால் சரி என்று மனதிற்குள் புலம்பியவாறே பயணம் தொடர்ந்தது – en minmini thodar kadhai-50.

இருவரும் அமைதி ஆனாலும் அவனது ஓட்டை டூவீலர் மட்டும் யார் பேச்சையும் கேட்காமல் விர்விர்விர் என்று கூச்சலிட்டு கொண்டே சென்றது.

– அ.மு.பெருமாள்

பாகம் 51-ல் தொடரும்

You may also like...

4 Responses

 1. Perumal says:

  தொடர்ந்து படித்து ஆதரவு தரும் அனைவருக்கும் மிக்க நன்றி

 2. தி.வள்ளி says:

  இளமை மற்றும் இனிமை ததும்பும் நடை ..பிரஜன்.. ஏஞ்சலா ஜோடியை சந்தித்து நாள் ஆகிவிட்டது.. இனி ரசிப்போம் அவர்கள் ஊடலை…

 3. Kavi devika says:

  வாழ்த்துகள்..தொடரட்டும் இனிதே

 4. Prasanna says:

  இனிமையான உரையாடல்..

  நம்மை அவர்களின் இடத்திற்கே கதைக்குள் அழைத்து செல்லும் ஈர்ப்பான கதை நடை..

  அருமை.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..