என் மின்மினி (கதை பாகம் – 44)

சென்ற வாரம் நேரில் தான் பேசமுடியல. என் கனவில் கூட வரமாட்டியா. முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன் – en minmini thodar kadhai-44

en minmini kathai paagam serial

தன் உளறலை தொடர்ந்தவன் தீடீர் என்று வந்துட்டீயா பரவாயில்லயே நினைத்தவுடன் வந்துட்டே என்றவாறே வா வா வீட்டுக்குளே வா வந்து உக்காரு என்று தூக்கத்திலே அவளை வரவேற்றான் பிரஜின்…

அவளும் நீ நெனச்ச உடனே ஒன்னும் வரல. எனக்கு உன்ன பாக்கணும்ணு தோணுச்சு வந்தே என்று சிரித்தாள் ஏஞ்சலின்… ஓகோ. அப்போ நான் நினைச்ச உடனே நீ வர மாட்டே என்று செல்லகோபத்தில் பிரஜின் அவள் கன்னங்களை கிள்ள அப்படியெல்லாம் இல்ல முதலில் கன்னத்தில் இருந்து கைய எடு என்று ஏஞ்சலின் சத்தமிடவும் வெடுக்கென்று முழிச்சு பார்த்தான் பிரஜின்…

அவள் பக்கத்தில் இல்லை.ச்சே இது கனவா…நனவா இருக்க கூடாதா என்று சலித்து கொண்டவாறே மீண்டும் தூங்கி போனான் பிரஜின்… அவளை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் விடியற்காலை சீக்கிரமே எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பினான்…இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று அவளுடைய கைபேசிக்கு அழைத்தான்….அழைப்பினை ஏற்க ஆள் இல்லாமல் ஓய்ந்து போனது அவளது கைபேசி…போன் கூட எடுக்காம எங்க போனா..இன்னும் என் மேலே கோபமா இருப்பாளோ என்று யோசித்தவாறே ஆபீஸ்க்குள் நுழைந்தான் பிரஜின்

அவன் உள்ளே சென்று சரியாக 1.30மணிநேரத்தில் ஆபீஸ் பைஃயர் அலாரம் வீச் வீச் என கதற தொடங்கியது.

பதட்டத்துடன் ஆஃபீஸினை விட்டு அனைத்து பணியாட்களும் வெளியே வர துவங்கினர். அனைவரும் வெளியே வந்ததினால் கூட்டத்துடன் கூச்சலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது… சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்து கொண்டே வெளியே நின்று கொண்டிருந்தவனுக்கு ஏதேச்சையாக கண்ணில்பட்டாள் ஏஞ்சலின்…

ச்சே இந்த வெயில் வேற என் அழகையே கெடுத்துரும் போலே இருக்கு என்று வெயிலிடம் கோபப்பட்டு கொண்டே ஏதேச்சையாக இவளும் பிரஜினை பார்த்தாள்….

இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின்…

அடங்கேப்ப்ப்பா… இவளுக்கு கோபம் போயே போச்சா ஆண்டவா ரொம்ப நன்றி என்று மனசுக்குள் சொல்லியவாறே அவளை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான் பிரஜின் – en minmini thodar kadhai-44

– அ.மு.பெருமாள்

பாகம் 45-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கதை அழகாய் மெல்ல நகர்கிறது ….வாழ்த்துக்கள்