கலவை சாதம் – சோளம் மசாலா ரைஸ்

இது மாதிரியான கலவை சாதங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விதவிதமாக சமைத்து அசத்தலாம். சிறுவர்களும் விரும்பி உண்ணுவார்கள் சத்துகளும் நிறைவாக கிடைக்கும் – kalavai satham solam masala rise

kalavai satham solam masala rise

தேவையானவை

பாஸ்மதி அரிசி – 1 கப்,
உதிர்த்த சோளம் – 1 கப்,
பச்சைப் பட்டாணி – 1 கப்,
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தாளிக்க :
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, மல்லித்தழை, சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாற அசத்தலாக இருக்கும் – kalavai satham solam masala rise.

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    மிக அருமையான எளிதான செயல்முறை கொண்ட. சத்துணவு சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி உண்பர் .பகிர்தலுக்கு நன்றி