சீரக துவையல் செய்வது எப்படி?


சீரகம் நமது உடலுக்கு பல விதத்தில் நன்மை செய்கிறது. உடல் வெப்பத்தை குறைக்க, உடல் எடையை குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் செய்த உணவுப்பொருட்களும் சீரகத்தின் தன்மையை எடுத்து செல்கிறது Seeraga Thuvaiyal.

தேவையான பொருட்கள் :

சீரகம் – கால் கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
சின்ன வெங்காயம் – 15,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 7,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு.

jeera chutni seeraga thuvaiyal

செய்முறை :

சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பாட்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான சீரக துவையல் ரெடி.

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்

You may also like...

3 Responses

 1. Pavithr says:

  அருமை..I will try in my home. I think it will be a delicious dish at my home.

 2. Siva says:

  healthy information. we can try in different ways.

 3. மது says:

  நல்ல ரெசிப்பி
  நன்றிகள்