மாயநதி

உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்
அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்க
மூடுகிறேன் maya nadhi.
குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.
இந்நதிக்கப்பால் நீ  குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள்
சலசலக்கின்றன.
பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி.

Mayanathi

பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்நதி.
சின்னஞ்சிறிய
பள்ளங்களை நிரப்பிக் கொண்டே.

nandha kumar

– நந்தகுமார்

You may also like...