டெல்டா மக்களுக்காக நீரோடை வாசகர்களுக்கு வேண்டுகோள்

கஜா புயல் கோரத்தாண்டவமாடி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சென்ற இவ்வேளையில் இப்பதிவை மிக முக்கியமாக ஒன்றாக கருதுகிறோம் . இப்பதிவு ஒரு தொகுப்பு மட்டுமே. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு பலரால் பகிரப்பட்ட தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தேவையான தகவலை மேலும் பல மக்களுக்கு நீரோடை வாசகர்கள் மூலம் சென்றடையும் வீதம் எழுதப்பட்ட கட்டுரையே இது save delta farmers.

save delta farmers

விவசாயத்தை மீட்டெடுப்போம்

தமிழ்நாட்டின் பெருவாரியான விவசாய மக்கள் வாழும் டெல்டா பகுதியில் ஏற்கனவே காவேரி நீர் பகிர்ந்தளிப்பு , மீத்தேன் எரிவாயு திட்டம் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விவசாய நிலம் கையாடல்கள் என மக்களின் இன்னல்கள் அதிகரித்து உள்ள நிலையில் இம்மாபெரும் புயல் மொத்த பயிர் மற்றும் மரங்களை குறிப்பாக தென்னை மரங்களை அழித்து சென்று விட்டது SAVE DELTA | Cyclone Relief Campaign | Save Delta Farmers.

தென்னை மரங்களை காப்போம்

ஏற்கனவே நெடுவாசல் பிரெச்சனையின் போது தமிழ் அறிவியல் பயிற்சி தளமான LMES நிறுவனர் பிரேமானந்த் அவர்களின் மாற்று வழி மீத்தேன் வாயு எடுக்கும் அறிவியல் விளக்கத்தை நீரோடை வாசகர்களுக்கு பகிர்ந்திருந்தோம். அது போல பிரேம் தற்போது புயலால் வேரோடு சாய்க்கப்ட்ட தென்னை மரங்களை மறுபடியும் நட்டு உயிர்ப்பிக்கும் அறிவியல் வழிமுறை ஒன்றை மற்றோரு காணொளி மூலம் விளக்கி உள்ளார். இதே போன்ற மற்றோரு விளக்கத்தை “தி இந்து” பத்திரிக்கைக்கு வேளாண் நிபுணர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அளித்திருக்கிறார்.

குறிப்பு: பணம் மற்றும் பொருளுதவி செய்ய நினைப்பவர்கள் பிரேம் அவர்களின் காணொளியில் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தி இந்து: https://tamil.thehindu.com/opinion/reporter-page/article25549190.ece

இங்கே அந்த இருவரின் விளக்க தகவல்களை பகிர்ந்துள்ளோம். நீரோடை வாசகர்கள் இவ்விரு விளக்கங்களை இங்கே படித்தறியும் போது இதன் காலம் சார்ந்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். இத்தகவல்கள் தென்னை விவசாயிகளின் வாழ்வை மீட்டெழ சிறிதளவில் உதவும் என்பதால் தயவு செய்து இதை அதிகம் பகிர வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏற்பட்ட பாதிப்புகளின் அளவையும் மக்களின் உணவின்மை உட்பட அடிப்படை வசதி பிரச்சனைகளை ஒப்பிட்டு பார்த்தால் நாம் செய்யும் இக்காரியம் வெறும் கடுகளவே save delta farmers.

நன்றி !

டெல்டா மக்களை மற்றும் மக்களின் பாரங்களை மீட்டெடுக்க உதவ (நன்கொடை அளிக்க) இங்கே சொடுக்கவும் https://milaap.org/fundraisers/supportdelta அல்லது தங்களின் பகுதி சமூக ஆர்வலர்களை தொடர்பு கொள்ளவும்.

You may also like...