வார ராசிபலன் ஐப்பசி 30 – கார்த்திகை 06

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-15 to nov-21.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்து வருவார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். ஒரு சில இன்னல்கள்  இருந்துகொண்டே இருக்கும், வீட்டில் ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒரு சிறு ஏமாற்றம் நிகழவும் சந்தர்ப்பம் உள்ளது. பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து போகவும். வியாபாரம் சுமாராகவே செயல்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம்  தேவை. விவசாயம் நஷ்டமே அடையும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்ப ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். எதிலும் ஆரம்பத்தில்  தடை இருக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் சேமிப்பு உயரும். பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் புதிய முயற்சி எடுப்பீர்கள். கலைஞர்கள் சுமாரான பலனே கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவும். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தல் நன்று.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்பம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய யுக்தியை பயன்படுத்துவீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார. எதையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் பிரகாசமாக காணப்படும். பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் உற்சாகமாக தென்படுவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிர்ப்புகள் சுலபமாக சமாளிக்கப்படும். சேமிப்பு கணிசமாக உயரும், யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். பணியாளர்கள் திறமையாக பணியை முடிப்பார்கள். வியாபாரம்  பூஜை பொருள் சம்பந்தமானவை லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை அடைவார்கள். மாணவர்கள் நிறைவு அடைவார்கள். விவசாயம் நல்ல கவனத்துடன் செயல்படவும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் சேமிப்பு உயரும். சில சமயங்களில் மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் உயர்வை சந்திப்பார்கள். வியாபாரம் சுமாராகவே நடைபெறும். கலைஞர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றமாக தென்படுவார்கள். விவசாயம் நல்ல வளர்ச்சி அடையும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எப்போதும் சுறுசுறுப்பாக தென் படுவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் உற்சாகமாக தென்படுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் சுமாராகவே இருக்கும்.
வழிபாடு: திங்கள் வெள்ளி தினத்தில் கோபூஜை செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வாழ்வில் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பம் அமைதியாகவே செயல்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். உடன்பிறப்புக்கு உதவி செய்வீர்கள். பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வருமான குறைவில்  தவிப்பார்கள். மாணவர்கள் பெற்றோரிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். செலவுகள் அதிகமாக காணப்படும். ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தம் இல்லாத பணியை செய்து வேலைப்பளு அதிகரிக்கும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் கீரை சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். உங்களுக்கென்று ஒரு கௌரவம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படும். உறவினர் மத்தியில் சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பணியாளர்கள் நல்ல நிர்வாக திறமை வெளிக்காட்டுவார்கள். வியாபாரத்தில் நன்மையே கிடைக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் பிறருக்கு நலம் புரிவார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தி அடையும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். நினைத்தவை எளிதில் கைகூடும், சேமிப்பு உயரும், அதிகார பேச்சு பேச வேண்டாம் வீடு மாற்றம் செய்யும் பணி நடைபெறும். பணியாளர்கள் கௌரவம் உயரும் வியாபாரிகள் நியாயமாக செயல்படுவார்கள். கலைஞர்கள் சிறந்த பாக்கியசாலிகள் திகழ்வார்கள். மாணவர்கள் வெற்றியை குவிப்பார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். எதிலும் நிதானமாக செயல்படவும். உறவினர் வருகையால் சங்கடங்கள் ஏற்படலாம். பயணம் செய்யும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். பணியாளர்கள் அதிகாரிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வியாபாரம் சீரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் விரயமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல கவனம் செலுத்தவும். விவசாயம் புதிய விவசாய கருவிகள் மூலம் விவசாயம் செழிக்கும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும் – rasi-palangal nov-15 to nov-21.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    நன்மையே பயக்கட்டும்

  2. Rajakumari says:

    எப்போதும் போல இந்த வாரமும் ஐயா அவர்கள் கூறியபடி நல்லது நடக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *