வார ராசிபலன் ஆடி 02 – ஆடி 08

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-18 to july-24

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்திற்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும், அண்டை வீட்டார் நட்புடன் இருப்பார். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பணியாளர்கள் பணியில் மேன்மை அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நல்ல உயர்வடைவார்கள். மாணவர்கள் சமநிலை பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் சரண் அடைவார்கள். வெளியூர் பயணத்தில் மாற்றம் வரலாம். வீடு பராமரிப்பு நடக்கும். பணியாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். கூடுதல் செலவுகள் ஏற்படும். உங்கள் முயற்சி தோல்வியில் முடியும். சவால்களில் வெற்றி அடைவீர்கள். பணியாளர்களுக்கு அதிக சுமை வரலாம். வியாபாரிகள் புதுமையை கடைபிடிப்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். சுபநிகழ்ச்சிகள் சென்று வருவீர்கள். உயரிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிரிகள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்தி கடைபிடிக்கப்படும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். மாணவர்கள் நஷ்டம் அடைவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று திருமால் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வாடிக்கையாளர்கள் நட்புறவுடன் இருப்பார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். பணவரவு சுமாராகவே காணப்படும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் சிரமப்படுவார்கள்.  மாணவர்கள் உற்சாகம் அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிலும் விட்டுக் கொடுத்து போகவும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். எதையும் தைரியமாக செய்யும் அனுபவம் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு அதிகாரிகளின் நெருக்கடி இருக்கலாம். வியாபாரத்தில் புதிய விற்பனை துவங்கும். கலைஞர்கள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் இணைவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சந்திரபகவான் நன்மையே செய்வார். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். நல்ல உற்சாகமாக காணப்படுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பாக்கியவான்கள் ஆக திகழ்வார்கள் விவசாயம் மானாவாரி பயிர்கள் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார்பணவரவு சுமாராக காணப்படும். புதிய நண்பர்கள் இணைவார்கள். மன உறுதி கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். பணியாளர்கள் புதிய பொறுப்பு ஏற்பார்கள். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள்.  மாணவர்கள் நெருக்கடியாக காணப்படுவார்கள். விவசாயம் காய்கறி கீரை வகைகள் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். புதிய நண்பர்கள் இணைவார்கள். உறவினர்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். பொது சேவையில் கவனம் செலுத்துவீர்கள். பிரயாணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். கலைஞர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் சுமாராக காணப்படுவார்கள். விவசாயத்தில் வருமானம் குறையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீக வழிபாடு செய்வீர்கள். எதிரிகள் சரண் அடைவார்கள். பழைய பாக்கி வசூல் ஆகும். பணியாளர்கள் தேவை பூர்த்தி அடையும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் நிதானமாக செயல்படவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். 
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிலும் சிந்தித்து செயல்படுவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. எதற்கும் பதட்டம் வேண்டாம், பொறுமையாக செயல்படவும். பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் புதிய யுக்தியை கடைபிடிப்பார்கள். விவசாயம் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து வரவும்


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பொறுமையாக செயல்படவும். பணவரவு சுமாராகவே இருக்கும். சிக்கனம் கடைபிடிக்கவும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள். வியாபாரத்தில் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal july-18 to july-24

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *