வார ராசிபலன் ஆனி 06 – ஆனி 12

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-20 to june-26

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். கணவன்-மனைவி இடையே கவனமாக பேசி வரவும். பெண்கள் எதிலும் கவனம் தேவை. பணியாளர்கள் உற்சாகம் அடைவார்கள். வியாபாரத்தில் கடன் தொல்லை நீங்கும். கலைஞர்களுக்கு மற்றவரின் தொல்லை இருக்காது. மாணவர்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிலும் நன்மையே உண்டாகும். பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். எதிரிகள் சரண் அடைவார்கள். பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்தி பயன்படுத்தப்படும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்களுக்கு இருந்த குழப்பங்கள் நீங்கும். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: நடராஜர் வழிபாடு  செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மற்றவர்கள் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு சுமாராக காணப்படும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் இணைவார்கள். விவசாயம் உச்சமடையும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். புதிய நண்பர்கள் இணைவார்கள். பேச்சை சற்று குறைக்கவும். எண்ணிய காரியம் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் அதிகாரிகளை அனுசரித்துப் போகவும். வியாபாரம் லாபம் உயரும். கலைஞர்களுக்கு புதிய பாதை அமையும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். காரிய வெற்றி அடைவீர்கள். வழக்குகள் சாதகமாக அமையும். முயற்சிகள் வெற்றியடையும். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் புதிய உத்வேகம் அடைவார்கள். விவசாயம் லாபம் அடையும். 
பரிகாரம்: செவ்வாய் கிழமையன்று முருகப்பெருமானை வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். செலவுகள் சற்று அதிகரிக்கும். இருந்து வந்த தடைகள் நீங்கும். யாரிடமும் வீண் பேச்சு வேண்டாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் பாக்கியவான்களாக திகழ்வார்கள். மாணவர்கள் திருப்தியடைவார்கள். விவசாயம் நடுத்தரமாக அமையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல் நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். எதையும் தெளிவாக பேசவும். பணியாளர்கள் மன குழப்பம் அடைவார்கள். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிரயாணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் புதிய பொறுப்பு ஏற்பார்கள். வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்களுக்கு மன பயம் விலகும். விவசாயத்தில் நஷ்டம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராகவே காணப்படும். மன உறுதி அடைவீர்கள். கவலைகள் குறையும், எதிர்ப்புகள் இருக்காது. பணியாளர்கள் சக ஊழியரின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரிகளுக்கு போட்டி இருக்காது. கலைஞர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் குறிக்கோள் வெற்றியடையும். பணவரவு நன்றாக அமையும்.-பெண்கள் மனக்குழப்பம் அடைவார்கள். எதிலும் நிதானம் கடைபிடிக்கவும். பணியாளர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்களுக்கு கவனம் தேவை. விவசாயம் நஷ்டமடையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். மற்றவர்கள் பேச்சை கேட்க வேண்டாம். காரிய வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் மறையும். கலைஞர்கள் மனவருத்தம் அடைவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் rasi-palangal june-20 to june-26

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...