படக்கவிதை போட்டி – யுகம் போற்றும் கிருஷ்ணன்

நீரோடை நடத்திவரும் படக்கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிஞர்களின் வரிகளை இந்த தொகுப்பில் வாசிக்கலாம் – yugam potrum krishnan kavithai

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர்கள் ம.யோகானந்தம், லோகநாயகி, மணி சரவணன், ஜோதி பாய் மற்றும் அனீஸ் ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம், மேலும் கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், வேல், தூத்துக்குடி மற்றும் சுவேதன் ஆகியோரின் வரிகளை வாசிக்கலாம்.

yugam potrum krishnan yugan

நாளைய நாயகன்

உளங்கவர் கண்ணனா
மணிமுடி மன்னனா
நாளைய நாட்டின்
நாயகன் நீயடா!
நினது சிந்தனை
வரப்பு உயர்ந்தால்
கோன் உயர்வான்
செங்கோல் நிலைக்கும்
என்பதோ!
சாம்ராட் அசோகன்
மரங்கள் நட்டார்
குளங்கள் வெட்டினார்
சரித்திரப் பாடம்
நாளைக் கற்பதை
நெஞ்சில் நிறுத்து!
செயலது ஆற்று!
பச்சை பட்டாடை
மண்ணுக்கு போர்த்து!
வானம் வாழ்த்தும்
நெகிழ்ந்து கண்ணீரால்! – yugam potrum krishnan kavithai

– ஜோதி பாய்


அழகா..!
கார் குழல் அழகா..? அதில் ஒரு
மயில் குழல் அழகா..? கையில்
புல்லாங்குழல் அழகா..?
சந்தன நெற்றி அழகா..?
நெற்றியில் சந்தனம் அழகா..?
குளிர் மூக்கின் நுனி அழகா..?
வில் வளைக்கும் வாய் அழகா..?
சிறு ஒரு பல் அழகா..?
துளிர் தளிர் நாக்கழகா..?
நீ இழுத்த உரல் அழகா..?
நீ காட்டும் விறல் அழகா..?
மருமகன் அழகா..?
மாமனால் அழகா..?
உன் பார்வை அழகா..?
நான் பார்க்கும் முறை அழகா..?

அப்புறம் வேறு என்ன ம்ம்ம்…….
மறந்துவிட்டேனே..?
நீரோடையில் நீயே அழகு

– அனீஸ், நாகர்கோவில்


இவன் கண்ணன் வேடமிட்டவன்
இவன் கவலைகளை
மறக்கவைப்பவன்
இவன் கோபியரை
கொள்ளைகொண்டவன்
இவன் குழந்தைகளின்
சின்ன கண்ணன்
இவன் காதலுக்கு
முதல் மன்னன்..!

– மணி.சரவணன், செங்கல்பட்டு


அவன் கையில் எடுக்க
குச்சிகள் கூட
குழல் ஆகும்….

அவன் எடுத்துச் சூட
காய்ந்த சருகும்
மயிலிறகு ஆகும்…

– லோகநாயகி


குட்டிக் கண்ணனே!

சுட்டித்தனத்தால் என் மனதை
கட்டி இழுத்தாயே!

வெண்ணெய் திருடித் திண்ணும்
மாயக்கண்ணனே!

கோபியரிடையே! குறும்பு பண்ணும்
விஷமக் கண்ணனே!

உன் மழலை! அழகைக் கண்டு
என் மனது அள்ளி அணைக்க தோனுதடா!

நீ எடுத்த அவதாரமோ! பத்து
“குட்டி கிருஷ்ண” அவதாரத்தைப் பார்த்த
மனதில் நீ நிலைத்திருப்பதே உன் கெத்து!

– சுவேதன்


அருளின் அவதாரம்

குழல் ஊத விரும்பும் கண்ணா உன்!
பிடி கொண்டு தாங்கும் கரம் ! அழகில் மின்னுதே..
குழந்தை பருவமான உன் முகப் பாவனையில்!
கிருஷ்ண பரமாத்மா உன்னுடன் வாசம் செய்கிறாரோ !
மழலை பேச்சில் நீ பேச நினைக்கும் வார்த்தைக்கு !
மன அழுத்தத்தில் என்னையே மறக்கின்றேன் ! ஒரு நிமிடம்…
ஆபரண சேர்க்கை உன் அழகோடு!
அங்கமெல்லாம் ஜொலிக்கின்றதே!
புன்னகை சிந்தும் உன் மெய் அழகில்!
புல்லாங்குழலும் கவிநயமாக கீதம் பாட நினைக்கின்றதே!
காண துடிக்கும் உன் கோலமான!
கண்ணன் ருபத்தை கண்டேன் என் கனவு
உலகத்தில் !

என் உள்ளத்தில் இடம் பிடித்து !
உன்னுள் மறைந்து இருக்கும் என் பகவானை!
மனதில் என்றும் தக்க வைத்துக் கொள்வேன்!
அன்பின் அருளாக…!!! – yugam potrum krishnan kavithai

– வேல், தூத்துக்குடி


கறுமேக மழை போழிய… கர்ஜிக்கும் இடி ஒழிக்க…
“கண்ணன் பிறந்தான்”…..

வாசுதேவன் தலை சுமக்க ஆற்று வழி மதுரா கடந்தான்….

கோகுல நந்தகோபன் மகனால் தினம் வளர்ந்தான்….

குறும்பு சுட்டியாய் சுற்றி திரிந்தான்….

கொஞ்சி ததும்பும் கோவை செவ்வாய்
வெண்ணெய் வடிய குழலோடு….
குவளை உடைத்தான் யசோதை இளங்கண்ணன்…..!

கூடிய தோழமை சிதற….
தனியே அகப்பட்ட கண்ணன்….
சிக்கினான் சிறித்தபடியே…..!

குணவதி யசோதை கோபம் குறைந்ததே மாலே
மணிவண்ணன் முகம் காண……!

அருள் பொங்கும் அனந்தசயனா அள்ளி எடுத்து
அனைத்தே இதய சிறையிலிட்டால்…..!

மறை நாதனை கயிர் இழை கொண்டு கட்ட….
அள்ளி உண்டான் அமிர்தமென்று மணலை…

வாய்திறக்க அண்டம் கண்டு அதிர்ந்த அன்பு தாய்…..!

ஆண்டானே…அவதரித்தானே…..ஆனந்தமுற்றால்….!

பூதகி பால் பருகி பூஉலக மோட்சம் தந்தான்…
ஆனந்த கலிங்க நடனம் புரிந்து கிருஷ்ணா நதி காத்தான்…!

ஆவின காவலனாய் பணி செய்தான்…..
அவன் இசையால் அவற்றையும் மயங்க செய்தான்…..

தொழில் செய்ய வழி தந்த கோவர்தன மலைக்கு
கொடை கொடுத்தான்….

கொடுங்கோப இந்திரனின் கர்வம் உடைக்க
கை விரலிலே மலை சுமந்தான்…..!

பல ராம அண்ணனின் பாதம் பணிந்தான்…..
பருவ காளையாய் கம்ச அரண்மனை புகுந்தான்….

வதம் செய்து அவதார பொருள் முடித்தான்….

பாமா ருக்மணி கரம் பிடித்தான்….
தேவகி அன்னையின் விளங்கொடித்தான்….

அம்மா என்றே… அவள் காலில் தலை பதித்தான்….

இரு அன்னை எனக்குண்டு என்றுறைத்தான்….

யசோதை நினைவில் நீங்கா இடம் பிடித்தான்….

“மா”பாரத போர் முடிக்க பார்தணுக்கு தோள் கொடுத்தான்….

மாந்தர் நம் குலம் சிறக்க கீதையின் பொருள் உரைத்தான்…..!

சிவராஜ் மணிவண்ணன்


கண்ணன்கள்

என்றுமே கள்வன்கள் ஆனால்
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
மகிழ்வளிக்கும் குதூகலங்கள்

காய்ச்சின பாலு தரேன்!
கல்கண்டுச் சீனி தரேன்!
கை நிறைய வெண்ணைய் தரேன்!
வெய்யிலிலே போக வேண்டாமென!
மாடு மேய்க்கப் போகும்!
ஆயர்பாடியிலுள்ள கண்ணனைப் பார்த்து!
போகாதே! நில்! கண்ணா!-என்று
கூக்குரல் இட்டு கெஞ்சினாள்!
ஆயர்பாடியில் இருந்த யசோதை!

காய்ச்சின பாலும் வேண்டாம்!
கல்கண்டுச் சீனி வேண்டாம்!
உல்லாசமாய் மாடு மேய்த்து!
ஒரு நொடியில் திரும்பிடுவேன்!
போக வேணும் தாயே!
தடை சொல்லாதே நீயே!
என்று விஞ்சினான் லீலைக்கண்ணன்!

புட்டியில் பாலு தரேன்!
புதிய பொம்மைகள் தரேன்!
கை நிறைய மிட்டாய் தரேன்!
வெளியில் போக வேண்டாமென!
வயல் வரப்பில் போகும்!
வேடமிட்ட கண்ணனைப் பார்த்து !
போகாதே! நில்! கண்ணே!-என்று
கூக்குரல் இட்டு கொஞ்சினாள்!
அலுவலில் இருந்த பெண்! – yugam potrum krishnan kavithai

புட்டியில் பாலும் வேண்டாம்!
புது பொம்மைகளும் வேண்டாம்!
கை நிறைய மிட்டாயும் வைண்டாம்!
உல்லாசமாய் வயலைச் சுற்றியே
விரைந்து வந்து விடுவேன்!
போய்விட்டு வருகிறேன் தாயே!
பின்னால் தொடராதே! நீயே!
என்று மிஞ்சினான்😋 சேஷ்டைக்கண்ணன்!

கண்ணன் என்று சொன்னாலே!
கண்களைக் கொள்ளை கொள்வானே!
கையில் குழலைப் பிடிப்பானே!
கையில் அகப்படாது திரிவானே!
இறகைத் தலையில் அணிவானே!
இறவாப் புகழை அடைவானே!
சேட்டைகள் எல்லாம் செய்வானே!
செயல்களைத் துணிவால் முடிப்பானே!
ஆயர்பாடியில் திரிந்த கண்ணனோ!
அழகாகத் திரிந்த கண்ணனோ!
இருவருமே எப்போதும் கள்வன்கள்!
இதயத்தில் என்றும் நிற்பவன்கள்!
உயர் பொருள்களைக் களவாடியல்ல!
உன்னத பொறைகளைக் கையில்தாங்கி!
முன்னவன்…
கோயில் கருவறையில் உறையும்!
திரு போல!
திருவுரு போல!

– ம.யோகானந்தம், பட்டதாரி ஆசிரியர், தருமபுரி

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கவிதை தொகுப்பு அருமை. பலவித அழகு மலர்களைத் தொடுத்து மாலையாக்கியதுபோன்று மணம் வீசும் பாமாலை..