சமுதாயமே எங்கே செல்கிறாய்

செல்லப் பிராணிகளை படுக்கையறையில்
உறங்க வைக்கத் தெரிந்தவன்,பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை
தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும்
நிம்மதி உறக்கம் கூட
கிடைக்கப் பெறாத நிலையில்
மூன்றாவது வீதியில் ஏதோ ஓர்
ஒலைக்குடிசையிலோ,
முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு,
மனைவிக்கு மாணவனாகி,!!
தான் பெற்ற மகவையும் , பள்ளி
விடுதியில்
அடகு வைத்து விட்டு
பிராணிகளுடன் மிருக வாழ்க்கை நடத்தும்
கொடுமைகளும் இங்கு உண்டு.
இது ஒருபுறம் இருக்க!!!!!

samuthaayame enge selgiraai

நரிகள் கூட்டம்
அரங்கேற்றத் துடிக்கும் மன்னர் ஆட்சி…

என்று மாறும் இந்த சமுதாயத்தின் பாதை . ? ?

அமரர் ஊர்திகளில் கூட அரவாணிகளுக்கு இடம் இல்லை என்ன உலகமடா இது ?

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. சிந்திக்க வைக்கும் கவி வரிகள்

  2. Chitra says:

    அவல நிலையை படம் பிடித்து காட்டும் கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *