நீரோடை பெண் – நூல் ஒரு பார்வை
தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodaippen nool oru paarvai
“நூல் பல கல்” என்பது சான்றோன் வாக்கு.
“நூல் பல செய்” (இயற்று) என்பது இந்தச் சகோதரியின் வாக்கு.
“நீரோடை பெண்” ஒரு சாமானியனின் உள்ளத்துக் கிளர்ச்சிகளை எடுத்துரைக்கிறது
ஆம். ஒரு தாயின் அன்பு, தந்தையின் தியாகம், ஒரு காதலியின் அழகு, ஒரு மனைவியின் காதல் அவளின் உள்ளார்ந்த பாசம், மழலை மொழி, அவர்களின் குறும்பு ஆகியவற்றை யதார்த்த வடிவில் காட்டியிருப்பது சிறப்பு.
உன்னை நினைத்தால்
பாலைவனத்தின்
தாகம் கூட தீரும் என்ற அடிகள்
தாய் பாசத்திற்கு ஏற்றவை.
விரல் பிடித்து
நடை பழக்கி என்று சொல்லும்
வரிகள் ஒவ்வொரு தகப்பனையும் மனக் கண் முன் காட்டுகிறது.
காதல் ஊற்று தலைப்பில் வரும்
அடிகள் ஒவ்வொன்றும் என்
மனதில் மலரும் நினைவுகளாய்.
தூக்கத்தைத் தூது விடுகிறேன்
உன் பக்கத்தில்
தூக்கியெறியப்பட்ட
காகிதமாகவாவது கிடக்க!
என்ற வரிகள் அருமையிலும் அருமை. காதலின் ஆழத்தை இங்கு உணரமுடிகிறது.
கண்ணீருக்கு போட்டியாய் என்ற தலைப்பில் எதிர் கால
வாழ்வில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தையும் பிரிவின்
சோகத்தையும் வேதனையையும் யதார்த்தமாய் எடுத்துக் காட்டுகிறது.
என் தாய் தந்த பரிசு நான்
எனக்கு பரிசாய் கிடைத்த தாய்
என் மகள் நீயே . என்ற வரிகள்
மழலையின் ஒரு பெண் குழந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது
அனைத்து கவிதை வரிகளும் எம் உள்ளத்திற்கு இதமளித்தது.
இனிமை மற்றும் எளிமையை கவிதை நடையில் தந்த சகோவுக்கு பாராட்டுகள்.
எதுகை மோனைத் தொடைகளை
பல இடங்களில் கையாண்டுள்ளீர்கள். சிறப்பு.
பாராட்டுகள் (எடு) – neerodaippen nool oru paarvai
காதல் வந்த இடத்தில்
காலம் காத்திருக்காது
காலம் நின்ற இடத்தில்
காதல் மெய்த்திருக்காது…
அருமையான வரிகள்
உங்கள் எழுத்துப் பணி தொடர என் வாழ்த்துகள்.
– கு. ஏஞ்சலின் கமலா, தமிழாசிரியை
அருமையான விமர்சனம். வாழ்த்துகள்….நீரோடை பயணம் தொடரட்டும் இனிதே என்றும்….
மிகவும் அருமையான திறனாய்வு சகோதரி…இளங்கவியின் இனிய கவிதைகள் தேனில் ஊறிய பலா…வளரட்டும் கவி..படைக்கட்டும் பல நூல்கள் …