முற்பகல் செ(ய்)யின்…. சிறுகதை

நல்லதொரு கருத்தை உள்ளடக்கி, வசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எண்ணத்தில் தங்கி விடும் சிறுகதைகள் சில, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை வழங்கும் கவிஞர், சிறுகதை ஆரிசியார் வள்ளி அவர்களின் முற்பகல் செய்யின் கதையை வாசிப்போம் – murpagal seyin tamil story

murpagal seyin tamil story

கண் மூடி திறப்பதற்குள் நடந்துவிட்டது.’ ஓ’வென்ற அலறல் தொண்டையோடு நின்றது பார்வதிக்கு . நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். யாரையும் உதவிக்கு கூப்பிடக் கூட வார்த்தை வரவில்லை. ஓடிவர தெருவில் ஆள் நடமாட்டமும் இல்லை.

பகல் வேலைகளை முடித்துவிட்டு, சந்தைக்குப் போய் திரும்பியவளை, குறிவைத்து வேகமாக வந்த பைக்கில் இருந்தவன் சடாரென அவள் தாலிச்சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு பறந்து விட்டான். என்ன செய்வதென்று தோன்றாமல் வீட்டுக்குள் நுழைந்தவள், தேம்பித் தேம்பி அழுதாள்.கழுத்து வலித்தது.வலியைவிட வெள்ளிக்கிழமையும் அதுவுமாக,தாலியை இழந்த தவிப்பு அதிகமாக இருந்தது.

தாலியை அறுத்துக்கொண்டு ஓடிய பைக்,இரண்டு தெரு தள்ளி இருந்த டீக்கடை முன் நின்றது. பைக் ஓட்டிய இசக்கி திரும்பி பின்னால் இருந்த முத்துவை பார்த்து சிரித்தான். “என்ன தல! 4 பவுன் தேறுமா.” என்றான்

“கூட தெரியுது இசக்கி! 5—6. தேறும் “என்றபடி செயினை பைக்குள் போட்டுக் கொண்டு சிரித்தான் – murpagal seyin tamil story.

” 2 ஸ்பெஷல் டீ போடுப்பா “என்றபடி பெஞ்சில் அமர்ந்தனர்.

முத்துவின் செல்போன் சிணுங்கியது.” நீ எங்க இருக்க முத்து? சீக்கிரம் வீட்டாண்ட வா” பதட்டமாக பக்கத்து வீட்டு மாரி கூப்பிட… முத்துவும், இசக்கியும் டீயை புறந்தள்ளிவிட்டு பைக்கில் பறந்தனர்.

வீட்டின் முன் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்த போது முத்துவின் பதட்டம் அதிகரித்தது.வீட்டுக்குள்ளிருந்து அவன் அம்மாவின் அலறல் உரக்கக் கேட்டது.

“ஐயோ! நான் என்னன்னு சொல்லுவேன்…. எப்படின்னு சொல்லுவேன்…. காலையில வேலைக்கு போன மனுசன் இப்படி பொணமா திரும்பி வந்திருக்குது… கட்டைல போறவன் எவனோ பைக்ல வேகமா இடிச்சு இப்படி பொணமாகிட்டு பூட்டாங்களே!அவனுக விளங்குவான்களா? என் தாலிய பறிச்சவன் விளங்கவே மாட்டான்.. யார் வயித்தெரிச்சலோ என் தலையில வந்து விடிஞ்சிடுச்சே…யாரு வெச்ச தீயோ வீடு வெந்து போச்சே…”

அம்மாவின் அலறல் முத்துவின் காதில் தெளிவாக விழுந்தது. அவன் கையிலிருந்த தாலியின் கனம் அவனை அழுத்தியது.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” சரிதானே???

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

8 Responses

 1. Ranjani says:

  எந்த வினைக்கும் எதிர் வினை உண்டு…

 2. R. Brinda says:

  நம் முன்னோர்கள் சொன்ன பழமொழி ஒவ்வொன்றும் அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்னது.

 3. D.barathi kokkirakulam says:

  கதை அருமை. நஞைமுறைக்கு ஒத்த கதை. இதை பார்த்தேனும் திருடுபவர் திருந்தினால் மகிழ்ச்சி. இதை போல் சமூக கருத்துள்ள கதைகளை அவ்வபோது தாருங்கள் மாடம்.

 4. D.barathi kokkirakulam says:

  கதை அருமை. நடைமுறைக்கு ஒத்த கதை. இதை பார்த்தேனும் திருடுபவர் திருந்தினால் மகிழ்ச்சி. இதை போல் சமூக கருத்துள்ள கதைகளை அவ்வபோது தாருங்கள் மாடம்.

 5. D.barathi kokkirakulam says:

  கதை அருமை. நடைமுறைக்கு ஒத்த கதை. இதை பார்த்தேனும் திருடுபவர் திருந்தினால் மகிழ்ச்சி. இதை போல் சமூக கருத்துள்ள கதைகளை அவ்வபோது தாருங்கள் மேடம்

 6. CA CS Kasi Sankara Namasivayam says:

  Superb ….
  Touching the heart …. heavily …at the end, particularly….
  The message meeting and depicting the Reality of the Life …
  Hearty congratulations 🎊
  Keep continuing 👍

 7. N.கோமதி says:

  தன் வினை தன்னைச் சுடும் என்பதை பிரதிபலித்தது.

 8. D.barathi kokkirakulam says:

  பூவிலே ஒரு பூகம்பம்.தனலப்பு அருனம.ஒரு பூவால்பூகம்பத்னதாங்க இயலாது.பெண்னுக்கும்அதேநினலதான்..தாய் பாசத்தின் இதயதுடிப்னப அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.கடளுக்கு செல்லும் ஒவ்வொறு கணவரின் வருனகனய எதிர் பார்த்து காத்திருக்கும் பெண்ணின் பாச போராட்டம் நினனவனலகனள நன்கு புரிய முடிகிறது.மீனவனுக்கும் இதே நினலதான்.இறுதியில் சுபமாக முடித்தனமக்குநனறி.கனதயில் கூட பெண் னகம் பெண் ஆககூடாது என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்திற்குநன்றி.By