என் மின்மினி (கதை பாகம் – 4)

சென்ற வாரம் அழைப்புமணி வந்தது, மீட்டிங் ஹாலுக்குள் செல்கிறான், யார் அங்கே ? பார்ப்போம் வாருங்கள்.… – en minmini thodar kadhai-4.

en minmini kathai paagam serial

சிறிது நேரத்திற்கு பிறகு மீட்டிங் ஹாலில் இருந்து திரும்பியவன் நேரம் செல்வதே தெரியாமல் தன் அலுவலக வேலையில் மூழ்கி
போனான்

தீடீர்னு ஒரு குரல்…அச்சு என்று ஓடி வந்த பப்பு தன் கைகளால்அவன் கைகளை பிடித்து அழுத்திகிட்டே சிரித்தாள்.அவளுக்கு
கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்யில் வேலை என்பதால் ஏசியில் நின்னு நின்னு கை சில்லுனு இருந்தது…அவள் கையை தன் கையில்
வைத்துகொண்டே பப்பு சிரித்தவுடன் இவன் காலையில் அடைந்த ஏமாற்றம் எல்லாம் அவனுள் பறந்து போனது…அவனும் அவள்
கைகளை இருக்க பற்றி கொண்டு அவளை பார்த்து சிரித்தான்..

என்ன இவ்வளவு நேரமா எங்க போயிருந்த.சாப்பாட்டுக்கு வேற நேரம் ஆச்சு இன்னும் போகாம இந்த டப்பா கம்ப்யூட்டரை
நோண்டிக்கிட்டு இருக்கே.என்ன வேலை செய்ற மாதிரி சீன் போடுறீயா என்று செல்லகோபத்துடன் பேசிக்கொண்டே
பிடித்திருந்த அவன் கையில் இருந்து தன் கைகளை லாவகமாக விலக்கினாள் பப்பு…

அவனும் சுதாரித்து கொண்டவனாக மெதுவாக கையினை விலக்கி ஓ… உனக்கு என்னை அச்சுனுதான் கூப்பிட புடிச்சிருக்கு
போலே என்றவாறே வா சாப்பிட போகலாம் என்று அவளையும் அழைத்துக்கொண்டு டைன்னிங் ஹாலுக்கு சென்றான் அச்சு…

இருவரும் தன் புன்னகைகளுடன் சேர்த்து தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டினையும் பரிமாறி கொண்டே சாப்பிட்டு
கொண்டிருந்தனர்…

இடையினில் குறுக்கிட்ட அச்சு.,
பப்புவை பார்த்து உன்கிட்டே ஒண்ணு சொல்லணும் சொல்லலாமா என்றான்…

ஹே என்ன இது பேசறதுக்கு எல்லாம் என்கிட்டே அனுமதி கேட்கணுமா???எதுவா இருந்தாலும் தாராளமா கேளு என்றாள்
பப்பு….

இல்லை சொன்ன பிறகு என்னை தவறாக நினைக்க கூடாது ஓகேவா என்று பயத்துடன் தயங்கி தயங்கி அது வந்து அப்படினு
அவளை பார்த்து திருதிருவென முழித்தான் அச்சு… – en minmini thodar kadhai-4

பாகம் 5-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. R. Brinda says:

    கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று அறிய ஆவலாக இருக்கிறோம்.