வார ராசிபலன் பங்குனி 01 – பங்குனி 07

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal mar-14 to mar-20.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் சாதகமான பலன் அடைவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் சற்று குறையும். தூங்கும் போது கனவுகள் அதிகம் வரலாம். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பணியாளர்கள்  சிறப்படைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடம் கடுமையாக இருக்கும். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை நன்கு லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: பவுர்ணமி தினத்தில் அன்னதானம் செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. நிலுவைப் பணம் வசூல் செய்யப்படும். கவலைகள் நீங்கும். குடும்பம் ஒற்றுமையாக காணப்படும். பணியாளர்கள் பணி எளிமையாக அமையும். வியாபாரிகள் அரசாங்க உதவி கிடைக்க பெறுவார்கள். கலைஞர்கள் கூடுதல் வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றியைக் காண்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். சுப காரியம் ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. பணவரவு நன்றாகவே அமையும். வீடு கட்டும் பணி துவங்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். பணம் வரவு தேவைக்கேற்ப அமையும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். புதிய நட்பு உறவு அமையும். பணியாளர்கள் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நூறு சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புதிய வீடு வாங்க யோகம் உள்ளது. அலைச்சல் அதிகரிக்கும். பணியாளர்கள் மரியாதையாக நடத்தப்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: பௌர்ணமி விரதம் இருந்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிர்ப்புகள் விலகும், கடின உழைப்பு தேவைப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்கள் வீண் அலைச்சல் எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் சிக்கல் வரலாம். கலைஞர்கள் போட்டி மனப்பான்மை உடன் செயல்படுவார்கள். மாணவர்கள் சிரமப் படுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் சிறு பிரச்சனை வரலாம். சொத்துப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சோர்வடைவார்கள். வியாபாரத்தில் போட்டி வரும். கலைஞர்களுக்கு போட்டி மனப்பான்மை நிலைக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சுப காரியத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எதிலும் திறமையாக செயல்படுவார்கள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பணியாளர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரிகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பு அடைவார்கள். கலைஞர்கள் கவனமாக செயல்படவும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராக அமையும். எதிர்ப்புகள் குறையும். நினைத்ததை முடிப்பீர்கள். பணியாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் போட்டி இருக்காது. கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் தெளிவு அடைவார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சகோதரர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெண்கள் நிதானமாக இருக்கவும். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவை. கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் கூடுதல் உழைப்பு தேவை. விவசாயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரிகாரம்: வீரபத்திரர் பகவானை வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். வீண் அலைச்சல் வரலாம். பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தினரிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் நவீனமயமாக்கம்.
பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு செய்து வரவும் rasi-palangal mar-14 to mar-20

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...