என் மின்மினி (கதை பாகம் – 26)

சென்ற வாரம் சொத்தில் அவருக்கு வர வேண்டிய பங்கையும் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு. இதுக்கு மேலேயும் அவரை கேவலப்படுத்தி பேசிட்டு இங்கே இருந்தா உங்கள உயிரோடு கொளுத்திருவேன் – en minmini thodar kadhai-26.

en minmini kathai paagam serial

ஆனாலும் அவர்கள் செல்வதாக தெரியவில்லை.அடுத்தவன் காசிலே உடம்பு வளர்க்கும் போதே இப்படி பேசறே.இன்னும் உன் புருஷன் சம்பாதிச்சு வந்து உன்னை ராணி மாதிரி வெச்சுருந்தா இன்னும் எவ்வளவு பேசுவீயோ.ரொம்பத் தான் பத்தினி வேஷம் போடாதே.இதை இந்த ஊர் மக்கள் வேணும்னா நம்பட்டும்.

நாங்க நம்ப தயாரா இல்லை என்று பேச பேச அம்மாவிற்கு அழுகையினை அடக்க முடியாமல் துடிதுடித்து அப்பாவின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்.

அம்மாவின் அழுகையினை தாங்க முடியாமலும் அண்ணன் தம்பிகளின் மீது உள்ள பாசத்தால் அவர்களை எதிர்த்து பேச துணிச்சல் இல்லாமலும் அப்பாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

கண்ணீர் வழிய வழிய கீழே விழுந்து கிடந்த அம்மாவின் கைகளை பிடித்து அவங்க ஏதோ ஆத்திரத்தில் பேசுறாங்க.அதை நீ பெருசா எடுத்துக்காதே. எல்லாம் சரி ஆகும் என்று ஆறுதல் கூற நானும் கண்கள் கலங்க ஆரம்பித்தேன்.தம்பி எதுவும் புரியாதவனாக யாரிடமும் பேசாமல் என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அம்மாவிற்கு அப்பா ஆறுதல் கூற இடையில் குறுக்கிட்ட சித்தப்பா அது எப்படி எல்லாம் சரி ஆகும்னு சொல்றே.அப்போ காலையில் எடுத்த காசை கொண்டு திருப்பி கொடுக்க போறீயா என்று மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போலே பேச ஆரம்பிக்க மனம் வெறுப்படைந்த அப்பா எழுந்து அவர்களின் அருகில் வந்து தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்க.உங்களை என் மகள் சடங்கிற்கு கூப்பிட்டது தப்பு தான்.

இனி நாங்க செத்தாகூட இந்த பக்கம் வந்துராதீங்க என்று அவர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டு கேட்டு கொள்ள அதற்கு மேலே ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

வீடே மையானம் போலே அமைதியாக கிடந்தது.ஒருவரையொருவர் முகத்தை பார்த்துகொண்டே எதுவும் பேசாமல் ஆளுக்கொரு மூலையில் முடங்கி கிடந்தோம்.

அம்மா மெதுவாக அப்பாவினை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது.அடுத்து ஏதோ நடக்க போகிறது என்று மட்டும் என் உள்மனது அடித்து கொண்டது – en minmini thodar kadhai-26.

– அ.மு.பெருமாள்

பாகம் 27-ல் தொடரும்

You may also like...

5 Responses

 1. Yajiv says:

  Story super and exacting returns and very super

 2. Yajiv says:

  Story super and exacting returns and very super

 3. Rajakumari says:

  . பாவமாக இருக்கிறது

 4. Kavi devika says:

  மேலும் வளரட்டும்.வாழ்த்துகள்

 5. தி.வள்ளி says:

  கதை விறுவிறுப்பாக நகர்கிறது ….அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது…..வாழ்த்துகள் சகோ..