கதை சொல்லி போட்டி வெற்றியாளர்கள்
பிப்ரவரி 17 அவினாசியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய விழாவில் “கதை சொல்லி போட்டி 1” முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
நெய்வேலி பாரதிகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருது பரிசாக மேடையில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம் பரிசை வென்றவர் சண்முகபிரியா கடலூர், கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களுக்கு நீரோடை நிர்வாகம் பரிசு மற்றும் கதை சொல்லி விருதை அனுப்பி வைக்கும்.
பத்து கதை சொல்லி விருதுகள்
கலந்துகொண்ட அனைவரின் படைப்பும் தவிர்க்க முடியாததாய் ருந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதில் நடுவர்களுக்கு சவாலாக இருந்தது. தவிர்க்கமுடியாத 7 பேர் கொண்ட பட்டியலை வழங்கினர். நீரோடை எழுத்தாளர்களையும் சேர்த்து பத்து பேருக்கு “கதை சொல்லி விருது” வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு மேடையில் விருது வழங்கப்பட்டது. கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்த விழாவில் அல்லது தபாலில் விருது அனுப்பி வைக்கப்படும்.
நெய்வேலி பாரதிகுமார்,
சண்முகப்பிரியா, கடலூர்
சாந்தி சரவணன், சென்னை,
கே. என். சுவாமிநாதன், சென்னை,
பொள்ளாச்சி அபி,
கவிமுகில் சுரேஷ்,
கா.மு. ஆயிசா, அவிநாசி,
வே. தினகரன் அவிநாசி,
கதாசிரியர் தி. வள்ளி,
மு. ஓவியா, நான்காம் வகுப்பு.
விழாவில் கதை கேளு நிகழ்ச்சி அறிமுகம், நீரோடை இலக்கிய விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டது.,
“தேன் அகராதி” மற்றும் நீரோடையின் பிரதான எழுத்தாளர் தி. வள்ளி அவர்களின் “சுந்தர பவனம்” நூல்கள் வெளியிடப்பட்டன.