கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55

kavithaigal thoguppu 33

உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!

படைத்தவன் வந்தெம்மை யாரென மொழிய
கேட்பது யாரென மறுமொழி வினவ
இவ்வுலகம் படைத்து உயிரினம் படைத்து
உன்னையும் படைத்த இறைவன் நானென்றுரைக்க
படைத்தது நீரெறால் எனை யாரென
மறந்தீரோ? அன்றிஅறிந்திட மறுத்தீரோ?
விவாதங்களெதற்கு யாரெனக் கூறுமின்! ஏனோ
செருக்குடன் என்னிடம் பேசுவது முறையோ?
படைத்தவன்மறந்ததுஉம்பிழையன்றோகேள்மின்!
எம்புகழ்மாண்புறயாரென நானும்…
மனிதன் தோன்றிய முதலேஅருந்தவமாய்
அவனியில் உதித்த அகமொழி நான்!
அனைத்து மொழிகளும் என்னிலிருந்து பிறக்க
தோற்றத்தின் ஆதியான மூத்தமொழி நான்
தொல்காப்பியம் தொடங்கி பல்வகை அணிகலனோடு
அழகோவியமாய் வளர்ந்த அமுதத்தமிழ்யான் !

சொற்சுவை பொருட்சுவை கூட்டி ஆடியும்
பாடியும் அசைந்தாடும்முத்தமிழ்நான் !
ஔவையின் சூடியில் அருமையாய் வளர்ந்து
பல நன்னூல்களில்ஒக்கம் கற்று
பாரதியின் புதுமையில் புத்தொளி பெற்று
வள்ளுவன் குறளில் உலகெலாம்பரந்து
உன்னத இடம்பிடித்த உயர்புகழ்பெற்ற
தமிழினத்தின் உயிரானஉன்னதமொழியான்!
பனையோலையில் பிறந்து இணையத்தில் தவழ்ந்து

தென்பொதிகைஅகத்தியரின்அகத்தில்மலர்ந்து
மதுரை சங்கம் சீராட்டி வளர்த்த
தமிழனின் தனித்துவம் போற்றும் செம்மொழிநான்!
பன்முககவிஞர்களின்எண்ணத்தில்நிறைந்து
கவிதையாய்உயர்ந்துஎல்லைகள்கடந்து
உலகம்போற்றஉலாவரும்இன்பத்தமிழ்நான்!!!!

– கவிதேவிகா, தென்காசி


வீட்டில் நண்பர்களிடத்தில் தமிழிலே உரையாடுவோம்

அதிகாலை குயில்களும் அந்திம பறவைகளும்
ஆடிப்பாடி குதூகளிக்குது தம்மொழியிலே
காலங்கள் உருண்டோடி புதுமைகள் பிறந்தாலும்
தம்மொழி மறவாது கதைபேசுது
ஐந்தறிவு உயிர்களின்ஆழ்மன சிந்தனைகள்
மனிதனிக்குமட்டும் மறந்தேபோகுது
புதுமைகள்பிறந்து பல மாற்றம் நிகழ்ந்தாலும்
தம்மினம்மறந்தா வாழ்வது ?
உண்ண கொடுத்து உடுக்ககொடுத்து
உயிர்தந்தது உன்னத தமிழ்மொழி!
பழமையின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றி
தலைமுறை காத்ததல்லவோசெம்மொழி!

நவயுக மாற்றத்தால் நம்மினமே உருமாறி
கலையிழந்துகாணாமல் போகுது
நேற்று வந்த பிறமொழியின் ஆட்சிகள்
உலகெங்கும் ஓங்கி நிற்குது
எங்கு நோக்கினும் அதன் ஆதிக்கமே
தலைதூக்கி தன்தடம்பதிக்குது
பொறுமை காத்து பெருமை பேசி
காலங்கள் பலகடக்குது
மாபெரும் யுத்தமொன்றை தமிழுக்காக
வேண்டி மனம் ஏங்கித்தவிக்குது
ரத்தமின்றிகேடயமின்றியுத்தமொன்று
மனதுக்குள் கனன்று கொண்டிருக்குது
உனக்கென்றும் எனக்கென்றும் அடையாளமாய் கொண்ட
தமிழ்நாட்டில்இன்னுமென்னமிச்சமிருக்குது
சதிகாரர் பலர் கூடிசதி செய்து வென்றோடி
சாதி மத பேதத்துக்குள்தள்ளுது
மதமென்ன இனமென்ன மொழியென்ன இருந்தாலும்
தமிழே நம்மைஒன்றிணைக்குது
தமிழிலே உரையாடி தமிழ் பெயர் கொண்டே
தலைமுறை வென்று வாழ்வோம்!!!

உலக அரங்கில் தமிழுக்கென புது சரித்திரம்
படைத்து புவியைஆழ்வோம்!!

– கவிதேவிகா,தென்காசி


தாய் உள்ளம்

அகமதில் அரும்பி அன்பெனும்
அட்சய அருவியாய் பொழியும்;
ஆழியாழ் மனதுள் அமுதெனும்
உயிர்வாழ வாழ்வ ளிக்கும்;
இன்பங்கள் இயைந்து இம்மையிலும்
இன்னிசை கீதம் இசைக்கும்;
ஈகையைஈந்தீந்து ஈடில்லா
ஈககத்தின் ஈரியமாய் மிளிரும்;
உள்ளத்தில் உவகைபொங்க உன்னதமாய்
உலகாண்டு உயிர்ப்பிக்கும் தாயுள்ளம்;
ஊக்கத்தை ஊங்கச்செய்து ஊன்றுகோலாய்
ஊழ்வினை யகற்றிட ஊக்கந்தரும்;
எங்கும் எதிலும் எம்பரும்
எழிலியாம் எந்தாய் உள்ளம்;
ஏக்கத்திலும் ஏகத்திலும் ஏமாப்பாய்
ஏந்திடும் ஏந்தெழிலாம் அவளுள்ளம்;
ஐம்பொறியின் ஐயுறவை ஐயமகற்றி
ஐந்தெழுத்தாய் நமையாளும் ஐயையுள்ளம்;
ஒன்றுள் ஒன்றாகி ஒலியாகி
ஒளிவடிவாகி ஒப்பில்லாமல் ஒளிரும்;
ஓங்குபுகழ் ஓங்காரமாய் ஓதையின்றி
ஓவியமாய் ஓராட்டும் ஓரதிகாரம்;
ஔவையாய் ஔடதமாய் ஔவியமகற்றி – kavithai thoguppu 55
உயிரெழுத்தாய் உயிரணைத்திலுமிருக்கும் தாயுள்ளம்;

– கவி தேவிகா, தென்காசி


கொரோனாவின்பாடம்… கற்கவேண்டும்நாமும்…..

விந்தைமனிதர் பலர்கூ(கோ)டி
வாழும் வேடிக்கை உலகமிது;
அன்றாட வாழ்வியலை
அட்டவணையிடும் இயந்திரத்தனமான காலமிது ;
தனதுடைமை தன்பொருட்டு
தனதாக்கிட பேராசைக் கொண்டு
கண்களிருந்தும் ,செவிகளிருந்தும்
குருடராய் ;செவிடராய் ;நாவிருந்தும்
ஊமையாய் ;மனிதத்தின்
மாண்பிருந்தும் மறந்திட்ட மானுடமாக
தனித்தே வாழ்ந்திடும்
ஒற்றுமை தேசமிது;பாதகங்கள்
பலசெய்தபோதும் மனிதருகிங்கு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே??!!!….

இயற்கையே இறையென்று
இனிமையாய் கொண்டாடியதொருகாலம்;
செயற்கைநாடி நாகரிகமோகங்கொண்டு
மதிப்பிறழ்ந்து மாறியதுபூலோகம்;
ஈடில்லா இயற்கைதன்னை
மாசுபடுத்தி பசுமைதனை அழித்தோம்;

தேசியக்கொடியின் சிவப்பைமட்டும்.
வறுமையின் சின்னமாக மாற்றிவைத்தோம்;
பொறுமையிழந்த பூமியும்
இயற்கைப்பேரிடரை இலவசமாக தந்தாலும்;
தந்திரமாகதான்மட்டும்
தப்பிப்பிழைக்கயென்னும் மானுடர்க்கு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே??!!….

கொதித்தெழுந்த இயற்கையும்
கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிரியொன்றை
கடல்தாண்டி, கண்டம்தாண்டி
அனுப்பிடவே;வந்துதித்ததுகொரோனா…..
ஊரடங்கும் வந்தது ;
பாடங்களை கற்று தந்தது;
நெகிழியின்றி சுத்தமானதால்
மகிழ்ச்சியடைந்த வீதிகள்; ஊரெல்லாம்
கோரிக்கைகளின் குவியல்களாகிய
புண்ணியதலங்கள் நிம்மதியாய் ஓய்வெடுக்க;
விண்ணும், மண்ணும்
மீண்டும் புதிதாய் பிறப்பெடுக்க;
நஞ்சையுண்ட வெளியெல்லாம்
அமுதுண்டு அழியாவரம் பெற்றனவே…….

உயிர்பயம் கொண்டு
பிதற்றும் மனித மனமே??!!
அகத்தின் மணங்கொண்டு
அறமெனும் மனிதநேய குணங்கொண்டு
இல்லார்க்கு இயன்றளவு
ஈந்திடுக; வாழ்வதும் மண்ணில் வீழ்வதும் ஒருமுறை;
அன்போடு வறியோரை – kavithai thoguppu 55
வாழ்வித்து வாழ்வோர்க்கு மேதினியில்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…..

– கவிதேவிகா, தென்காசி

You may also like...

1 Response

  1. வீ.ராஜ்குமார் says:

    கவிதைகள் நன்று! வாழ்த்துகள்! 👏
    தமிழ் பற்றிய வசன கவிதைகளில் கவிதையைவிட வசனமே சற்று திகட்டுவதாக அமைந்துள்ளது என நினைக்கிறேன். (நானும்கூட இவ்வகையில்தான் எழுத இயலுகிறது)

    மரபு வடிவத்தில் எழுத முனைவது தெரிகிறது. சீர்களைப் பிரித்துக் காட்டுவதில் கவனம் தேவையென உணர்கிறேன்.

    ‘பன்முககவிஞர்களின்எண்ணத்தில்நிறைந்து’ …..இத்தனை நீளமானதொரு சொல்லை உருவாக்க வேண்டாம்! 😊

    அகர வரிசையில் அமைத்த ‘தாயுள்ளம்’ கவிதையும், கொரானா பற்றிய கவிதையும் சிறப்பாக உள்ளன! மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்! 💐