என் மின்மினி (கதை பாகம் – 45)

சென்ற வாரம் இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-45

en minmini kathai paagam serial

கொஞ்ச நேரத்தில் நிலைமை சீராகவும் கூட்டம் கலைய தொடங்கியது.என்னதான் நடந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்வதை மட்டும் நிறுத்தாமல் கூட்டத்துடன் கூட்டமாக நடந்தனர்… தன் ஆபீஸ் ரூம் வந்ததை கூட கவனிக்காமல் எதிரில் இருந்த சுவற்றில் சென்று முட்டிக்கொண்டே,அவனை பார்த்து கண்களை அடித்துவிட்டு உதடுகளை குவித்து தன் முதல் முத்தத்தை காற்றில் பறக்க விட்டு டாடா காட்டி உள்ளே செல்ல முற்பட்டாள்
ஏஞ்சலின்…

ஹே ஹே கவனமா என்று கண்களால் செய்கை செய்தவாறே, ஐய்யோ என்ன பொண்ணுடா எப்பா என்று ஒரு கையால் நெஞ்சை பிடித்தவாறே மறு கையால் அவள் பறக்க விட்ட முத்த கணையை பிடித்து தன் உதட்டில் ஒத்தி கொண்டவாறே கண் அடித்து விட்டு அவள் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்று வேகமாக தன் ஆபீஸ் ரூம் நோக்கி நடந்தான் பிரஜின்… அவன் செல்வதை தன் ஆபீஸ் ரூம் ஜன்னல் மூலமாக ஒளிந்து நின்று பார்த்து கொண்டிருந்தாள் ஏஞ்சலின்…

சற்றும் எதிர்பாராவிதமாக சென்று கொண்டிருந்தவன் தன் கழுத்தை திரும்பி உதடுகளை குவித்து ச்ச் என்று காற்றில் வாங்கிய முத்ததிற்கு பதில் பரிசளித்து விட்டு அவள் கண்களை விட்டு மறைந்தான் அவன்…
ஒளிஞ்சா பாக்குறே?இப்போ மாட்டிகிட்டியா என்று தன் தலையில் செல்லகுட்டு ஒன்றை தனக்கு தானே கொடுத்து கொண்டு சிரித்தாள் ஏஞ்சலின்…
மாலை ஆபீஸ் முடிந்து ஒவ்வொருவராக வெளியே செல்ல ஆரம்பித்தனர்.வழக்கம் போலே வெளியே வந்து காத்து கொண்டிருந்தான் பிரஜின்…

சிறிது நேரம் ஆகவும் சிரித்தமுகமாய் தன் தோழிகளுடன் கடைவீதிக்கு செல்ல வெளியே வந்தாள் அவள்… எதிர்பாராத விதமாக அவனை பார்த்தவளுக்கு ஏக மகிழ்ச்சி.என்ன சொல்லவே இல்ல.வந்து காத்துகிட்டு நிக்குறான்.ஒரு வேளை வேற யாருக்காகவோ வெயிட் பண்றானா….விடு அவனையே கேட்டு பாப்போம் என்று மனதிற்குள் நினைத்தவாறே தன் தோழிகளுக்கு தெரியாமல் கண் ஜாடைக்காட்டி அவனை கேட்டாள் ஏஞ்சலின்…

ஆமா என் ஆளு வருவா.அவளை கூட்டிட்டு நைட்ஷோ போறேன்.நான் எங்க போனா உனக்கு என்ன என்று அவளது மொபைல்க்கு குறுஞ்செய்தி ஒன்றை தட்டி அவளை டென்ஷன் படுத்தினான் பிரஜின்…

நீ எங்க போனா எனக்கு என்ன? எதோ எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு நிக்குறீயோணு கேட்டா ஓவரா பேசறே…. போடா யார்கூட வேணா எங்க வேணா போ… என்ன எல்லாம் உனக்கு கண்ணு தெரியுமா என்று ரிப்ளை ஒன்றை தட்டிவிட்டு தன்தோழிகளுடன் சென்றாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-45

– அ.மு.பெருமாள்

பாகம் 46-ல் தொடரும்

You may also like...