சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”
ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..
எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்…..

வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நூல்களை நேசித்து வாழ்பவர் பலருண்டு … அவர்களில் யான் கண்ட சிறந்த மனிதர், கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர் என்று பன்முகத்தன்மையாளர் அருமை அண்ணன் தாணப்பன் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு நூல் “சுற்றந்தழால்” பற்றிய பகிர்வு இது….

அட்டைப்படம் அற்புதம்…..

ஆழமான அதே சமயம் சிந்திக்க வைக்கும் தலைப்பு…..
சந்தியா பதிப்பகம் வழங்கிய நூலாசிரியர் குறிப்பில் தொடங்குகிறது நூல்… வண்ணதாசன் ஐயா வழங்கிய தாணப்பன் அண்ணனைப் பற்றிய சிறுகதையை படிக்கவா அல்லது அண்ணனின் சிறுகதையை படிக்கவா என்ற குழப்பத்தில் ,சான்றோருக்கு மதிப்பளிக்கும் வகையில் வண்ணதாசன் ஐயா வின் உரையை படிக்கலானேன்…. ஆழ்வாசிப்பின் உற்றுநோக்குதலை யென்போன்ற ஆரம்பவாசிப்பாளர்களுக்கு பாடமாக சொல்லாமல் சொல்லி சென்றுள்ளார்.

ஒவ்வொரு கதையின் கதைமாந்தர்களையும்,கதைகளையும் நூலாசிரியரின் வாழ்வியலோடு பொருத்தி, விளக்கம் தந்தமை மிக அற்புதம்….இவர் மனிதர்களை வாசிப்பதிலும் ஆளுமை கொண்டவர் என்பதில் ஐயமில்லை……

சரி… இனி கதைக்களம் காண்போம்….

முதல் கதை பிருகன்னளை….

நம் அன்றாட வாழ்வில் மிக எளிதாக,சில நேரங்களில் ஏளனமாகக்கூட கடந்து போகிறோம் எத்தனையோ பிருகன்னளை களை….
அவர்களுக்கும் அழகான பக்கங்களுண்டு பார்த்திபனா யிருந்தவரையிலுமென்பதை உணர்ந்ததேயில்லை….

ஆநிரை

அனைத்து உயிர்களையும் தன்னுறவாய் கொண்டு வாழும் கந்தனைப்போல அற்புத மனிதர்களிருக்கும்வரை அகிலத்தில் மழை பொழியும்….

இல்லெனினும் ஈ
கதிரேசனைப்போல நேசர்கள் வாழ்வதால் தான் புவி சுழல்கிறது அன்பினால் இன்றளவும்…..

இன்னும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்கால சூழலை எடுத்துக்கூறும் உணர்வுமயமான கதைகள், சுற்றந்தழால், எனை மிகவும் உணர்ச்சிக்குள்ளாக்கிய “இறங்கும் மனிதர்களும் இரங்கா மனிதர்களும், என் நாட்குறிப்பிலிருந்து, வளைவு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…..

அனைத்து கதைகளையும் பகிர்ந்துவிட்டால் புத்தகம் வாசிக்கும் ஆவலும், சுவாரஸ்யமும் குறையக்கூடுமென்பதால் இத்துடன் முடிக்கிறேன் என்னுரையை…. அண்ணனின் எழுத்தும் எண்ணமும் மென்மேலும் உயர்வு பெற அன்பத்தங்கையின் மனமார்ந்த வாழ்த்துகள்….

– கவி தேவிகா

You may also like...

2 Responses

  1. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

    தலைப்பு- சுடும் நிழல்கள். பாச மழைப்! !பொழிந்து! உறவைப்!பாதியிலே ஒதிக்குவிட்டு வேசக்கலைப் போட்டு மனதில்! வேள்வித் தீயினை! வளர்த்து வெட்டிவிடும் உறவுகளோ! சுடும் நிழல்கள்! நட்பாகப் பேசி அன்பான! உறவில்!கலந்துவிட்டு! துப்பாகப் பேசி துவண்டு விடச்செய்யும் நண்பர்களோ! சுடும் நிழல்கள்!.கணவன் வீட்டில் உள்ளவரை இல்லத்தரசி!அவன் இல்லாதவரை அடுத்தவனின் உள்ளத்தரசி! என்றிருக்கும் பெண்களோ! சுடும் நிழல்கள்! பத்து மாதம் பெற்றெடுத்து பித்து கலங்கினால் போல் சொத்துக்கு ஆசைப்பட்டு தன் குழந்தையை விற்கும் பெற்றோர்களோ! சுடும் நிழல்கள்!. பகலில் பகட்டு வேசம் இரவில் திருட்டு வேசம் என்றிருக்கும் கள்வர்களோ! சுடும் நிழல்கள்! பள்ளியில் கல்வி கற்றுக் கொடுத்து காம கலவியில் மாணவிகளை பாலியல் தொல்லைத் தரும் ஆசியர்களோ சுடும் நிழல்கள்!.

  2. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

    தலைப்பு-கவிதை. முக்கடலும் சங்கமம் கவிதை என்ற மூன்று எழுத்தில்.கதிரவனை கண்டால் தாமரை விரியும்.கவிதை வரி ஒளி வீசியினால் கதிரவனும் மெய் சிலிர்ப்பான்.மலர்க ளின் மலலிகை பாவையின் கூந்தலில் மணம் வீசும்.கள்ளி கவிதையவளின் இலக்கண பூங்கா மணப்பந்தலில் திருநிறைச்செல்வன் மல்லிகை காந்தன் திருமணம் முடிப்பான் இளந்தென்றல் பாடும் சுகம் ஒன்று நாடும்.இளங்கவிதைசுகநயத்தால் இளந்தென்றலும் இளைப்பாறும்.தோகைதனை மயில் விரித்தாடும்.கவிதைக்குயில் பாட்டிலசத்தால் தோகைமயிலும் பரவசமாகும் பவனி வரும் வட்டநிலவு இரவினில் வெளிச்சமிடும்.உலவி வரும் கவிதைச் சரங்கள் நிலவினில் பௌர்ணமி சந்தம் அமைக்கும் படைப்பாளி பிரமனும் வருந்துவது நான் படைத்த கவிதைகளை படைக்கவில்லை என்று.இருந்தாலும் உணர்வினில் சிந்தனையை ஊட்டுகிறான்.நான் உங்களுக்கு ரசனையை தூண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *