மின்னிதழ் டிசம்பர் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh december 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

கவிதை தொகுப்பு (கவிஞர்கள் அறிமுகம்)

கொங்கு சமையல்

ஐந்து பெரிது ஆறு சிறிது

இளநிலை கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவரின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஒரு பக்க கதையை வெளியிடுகிறோம்

அந்த வீட்டு ஓனர் ஒரு கூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதி அந்த கூடையில் போட்டு பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார். மணி கூடையை எடுத்துக்கொண்டு கடையை நோக்கி புறப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி அந்த கடைக்குள் மணி நுழைந்தது . கடைக்காரரிடம் கூடையை கொடுத்தது. கடைக்காரர் அந்த சிட்டையில் எழுதி இருந்த பொருட்களை எல்லாம் கூடையில் போட்டு கொடுத்தார். கூடையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை கூடையில் போட்டுவிட்டார். மணி கூடையை பெற்றுக்கொண்டு வேகமாக கடையை விட்டு வெளியேறி மெல்ல நடந்தது. வரும் வழியில் ஒரு சிக்னல் ஒன்று இருந்தது. அந்த நாய் சிக்னலில் கூடையுடன் நின்று கொண்டிருப்பதை எல்லோரும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்தனர். ஒரு நாய்க்கு கூட சிக்னலில் நின்று செல்ல வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால்
மற்ற நாய்களுக்கு தெரியவே இல்லை……..

ஒரு வழியாக அந்த நாய் வீட்டிற்குள் வந்து கூடையை ஓனரிடம் கொடுத்தது. அதனை வாங்கிக் கொண்டு அதன் முகத்தில் வீட்டுக்காரர்

“ஏன் இவ்வளவு நேரம் கழித்து லேட்டா வர்ற “ என்று சொல்லி முகத்தில் தாக்கினார். ஐந்து அறிவு உள்ள நாய்க்கு இருக்கும் அறிவு கூட
ஆறறிவுள்ள மனிதனுக்கு இல்லை……

பெ.சிவக்குமார் கோட்டைப்பட்டி

You may also like...