நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு
by Neerodai Mahes · Published · Updated
நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
விருதுபெறும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள்,
நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்
நூலாசிரியர்: எழுத்தாளர் சந்திரா மனோகரன்
நூல்: குடம்பி
நூலாசிரியர்: எழுத்தாளர் நிழலி
விருது விழா அவினாசியில் வரும் பிப்ரவரி 22 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இரண்டு நூலாசிரியர்களுக்கு விருதும், அறிவிக்கப்பட்ட தொகை பகிர்ந்தும் வழங்கப்படும்.
விருது பெறும் நூலாசிரியர்களுக்கு நீரோடை சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.